Top
undefined
Begin typing your search above and press return to search.

எங்கே செல்கிறது ஜனநாயகம்? ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ரூ.50 லட்சத்திற்கு ஏலம்!

எங்கே செல்கிறது ஜனநாயகம்? ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ரூ.50 லட்சத்திற்கு ஏலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2019 1:11 PM GMT


பண்ருட்டி அடுத்த நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், சொரத்தான்குழி, பாப்பன்குளம், ஆகிய பகுதிகளுக்கு உட்பட்டது நடுகுப்பம் ஊராட்சி.


இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சக்திவேல் என்பவர் ரூ.50 லட்சத்திற்க்கு ஏலம் எடுத்துள்ளார். முருகன் என்பவர் துணைத் தலைவர் பதவியை ரூ.15 லட்சத்திற்க்கு ஏலம் எடுத்துள்ளார்.





இது குறித்து தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ள சக்திவேலிடம் கதிர் செய்தியாளர் கேட்டபோது, “கடந்த முறை 5 ஆண்டுகாலமாக ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் நான் இருந்துள்ளேன். தற்போது திரொவ்பதி அம்மன் ஆலயப் பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், கோயில் பணியை முடிக்க ஏதுவாக இருக்கும் என்று ஊர்மக்கள் ஒன்றுகூடி பேசி தீர்மானித்தனர். இதை தவறாக செய்தி பரப்பி வருகின்றனர்” என்றார்.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


Next Story