Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ரூ.50 லட்சத்திற்கு ஏலம்! விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு!

ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ரூ.50 லட்சத்திற்கு ஏலம்! விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2019 8:13 AM GMT


பண்ருட்டி அடுத்த நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம், சொரத்தான்குழி, பாப்பன்குளம், ஆகிய பகுதிகளுக்கு உட்பட்டது நடுகுப்பம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்து தலைவர் பதவியை சக்திவேல் என்பவர் ரூ.50 லட்சத்திற்க்கு ஏலம் எடுத்துள்ளார். முருகன் என்பவர் துணைத் தலைவர் பதவியை ரூ.15 லட்சத்திற்க்கு ஏலம் எடுத்துள்ளார்.


இது குறித்து தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ள சக்திவேலிடம் கதிர் செய்தியாளர் கேட்டபோது, “கடந்த முறை 5 ஆண்டுகாலமாக ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் நான் இருந்துள்ளேன். தற்போது திரொவ்பதி அம்மன் ஆலயப் பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், கோயில் பணியை முடிக்க ஏதுவாக இருக்கும் என்று ஊர்மக்கள் ஒன்றுகூடி பேசி தீர்மானித்தனர். இதை தவறாக செய்தி பரப்பி வருகின்றனர்” என்றார்.


இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் நடைமுறை மற்றும் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்தது.


பின்னர் செய்தியாளரிடம் பேசிய அன்புசெல்வன், “பண்ருட்டி அருகே நடு குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊரில் ஏலம் விடப்பட்டதாக தகவல் வந்தது. இதுதொடர்பாக பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், தேர்தல் விதிமுறையின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போட்டியிட விரும்புகின்ற அனைவரும் மனு தாக்கல் செய்யலாம். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று கூறினார்.


கடலூர் மாவட்டத்தில், இதுவரை 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், உள்ளாட்சி மன்ற தலைவருக்கு 27 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் மாட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்தார்.


Next Story