Top
undefined
Begin typing your search above and press return to search.

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், கற்பழிப்புக்கு என்ன சொல்லியிருப்பார்? - சோ அன்றே சொன்ன தீர்க்கதரிசனம்!

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், கற்பழிப்புக்கு என்ன சொல்லியிருப்பார்? - சோ அன்றே சொன்ன தீர்க்கதரிசனம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2019 6:11 AM GMT


ஹைதராபாத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “உலகின் கற்பழிப்பு தலைநகரம் இந்தியா” என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் அவ மதிக்கின்ற வகையில் கூறினார்.


இந்த நிலையில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்போது மத்திய அமைச்சராக இருந்திருந்தால், கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக அவர் என்ன மாதிரியான கருத்தை வெளியிட்டு இருப்பார் என்பதை துக்ளக் ஆசிரியர் சோ பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார்.



இதுதொடர்பாக சோ பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சோ குறிப்பிட்டு இருப்பதாவது:-





கற்பழிப்பு சம்பவங்கள் நடக்க கூடாது, இது கொடுமையானது, கண்டிக்கப்பட வேண்டியது, நல்ல தண்டனை தரப்பட வேண்டும், நல்லவேளை சிதம்பரம் உள்துறை அமைச்சராக இப்போது இல்லை, அவர் என்ன சொன்னார் என்றால், ராபர்ட் வத்ரா மீது குற்றச்சாட்டு வந்தபோது, அது ஒரு தனிப்பட்ட நபருக்கும், ஒரு நிறுவனத்திற்கும் உள்ள விவகாரம். மற்றவர்களுக்கு இதில் என்ன அக்கறை என்று கேட்டார். அந்த கம்பெனி இவருக்கு (வத்ராவுக்கு) அட்வான்ஸ் கொடுத்து. இவர் நிலத்தை வாங்கி அந்த கம்பெனிக்கு 10 மடங்கு விலையில் விற்றார். இதில் அரியானா அரசு உதவி செய்து, சலுகைகளையும் அளித்து. இதையெல்லாம் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. ஆகவே ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், கற்பழிப்பு சம்பவத்திற்கு, இது ஒரு பெண்ணிற்கும், ஒரு ஆணிற்கும் இடையில் நடந்த சம்பவம். இதில் நமக்கு என்ன வேலை உள்ளது? என்று கூறியிருப்பார்.


இவ்வாறு துக்ளக் ஆசிரியர் சோ குறிப்பிட்டுள்ளார்.


இதன்மூலம் சிதம்பரத்தின் முகத்திரையை அன்றே, தெளிவாக கிழித்து உள்ளார் சோ.


Next Story