Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திராவில் ரேஷன் கார்டில், இயேசு கிறிஸ்து படம்! ஜெகன்மோகன் ரெட்டி அரசு அடாவடி!

ஆந்திராவில் ரேஷன் கார்டில், இயேசு கிறிஸ்து படம்! ஜெகன்மோகன் ரெட்டி அரசு அடாவடி!

ஆந்திராவில் ரேஷன் கார்டில், இயேசு கிறிஸ்து படம்! ஜெகன்மோகன் ரெட்டி அரசு அடாவடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2019 5:01 AM GMT



ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆன பிறகு கிறிஸ்தவ மிஷினரி கும்பல்களின் மதமாற்றம் திறந்துவிடப்பட்டுள்ளது.


இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்கு பல்வேறு வகையான தாக்குதல்களை, கிறிஸ்தவ மிஷினரிகள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பயணச்சீட்டில் “இயேசு தான் மெய்யான கடவுள்”, “ஜெருசலேமுக்கு புனித யாத்திரை வாருங்கள்” போன்ற வாசகங்களை அச்சடித்து இந்து பக்தர்கள் கையில் திணித்தனர்.


திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “இயேசுவை வணங்குவோம்”, “இயேசுவே மெய்யான கடவுள்” போன்ற வாசகங்களை திடீரென்று இணைத்தனர்.


இதைப்போல ஆந்திரா மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மிஷினரி கும்பல்களின் மதமாற்ற நடவடிக்கைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக ஆந்திராவில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளில் இயேசுகிறிஸ்துவினுடைய படத்தை அச்சிட்டு வழங்கி, ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஓட்டுப்போட்ட இந்துக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இயேசு கிறிஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டுகளை வழங்கி உள்ளனர். இது இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.




https://twitter.com/mallikarjunasg/status/1203270631535439873?s=08



இதுதொடர்பாக பொதுவினியோக வழங்கல் துறை இயக்குனர் அருண் பாபு விடம் கேட்டபோது, “டீலர் இப்படி ரேஷன் கார்டில் இயேசு கிறிஸ்து படத்தை அச்சிட்டு உள்ளார். இதற்கும் ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார் சர்வ சாதாரணமாக.


இந்து அமைப்புகளும், பல்வேறு தரப்பினரும் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த மதவெறி நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News