Top
undefined
Begin typing your search above and press return to search.

#Breaking | அமித்ஷாவின் ஆட்டம் தொடர்கிறது! ராஜ்ய சபாவிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! ஆதரவு – 117; எதிர்ப்பு – 92

#Breaking | அமித்ஷாவின் ஆட்டம் தொடர்கிறது! ராஜ்ய சபாவிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!  ஆதரவு – 117; எதிர்ப்பு – 92

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 3:15 PM GMT


குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை, பாராளுமன்ற லோக்சபாவில், நிறை வேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்களும், எதிராக 80 எம்பிக்களும் ஓட்டு போட்டனர். இதன்மூலம், இந்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை, பாராளுமன்ற லோக்சபாவில், நிறை வேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்பிக்களும், எதிராக 80 எம்பிக்களும் ஓட்டு போட்டனர். இதன்மூலம், இந்த மசோதா, லோக மக்களவையில் நிறைவேறியது.


இதனைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, பாராளுமன்ற ராஜ்ய சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை தாக்கல் அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து கார சாரமான விவாதங்கள் நடந்தன.


ராஜ்ய சபாவின் மொத்த பலம் 238. பாஜகவிற்கு 83 எம்பிக்கள் உள்ளனர். பாஜக கூட்டணி பலம், 105 ஆக உள்ளது. மசோதா நிறைவேற 120 எம்பிக்களின் ஆதரவு தேவை.


11 அதிமுக எம்பிக்கள், 7 பிஜு ஜனதா தளம் எம்பிக்கள், 2 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள், 2தெலுங்கு தேசம் எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று மாலை, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, ராஜ்ய சபாவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 117 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 92 எம்பிக்கள் வாக்களித்தனர். மற்றவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


இதன் மூலம் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.


ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா, சட்டமாக வடிவம் பெறும்.




Next Story