Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜாதியை ஒழிக்க போராடினார் பாரதியார்; ஜாதி வெறியை தூண்டி, பிழைப்பு நடத்துகிறார் திருமாவளவன்!

ஜாதியை ஒழிக்க போராடினார் பாரதியார்; ஜாதி வெறியை தூண்டி, பிழைப்பு நடத்துகிறார் திருமாவளவன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 7:43 AM GMT


“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடிய மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இன்று. தாழ்த்தப்பட்ட ஜாதிகள் என்று சொல்லப்படுகின்ற ஜாதியில் பிறந்த ஒருவர், ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடினார் என்றால், அது உரிமைக்கான போராட்டம் என்று எடுத்துக் கொள்ளலாம்.


உயர்ஜாதி என்று சொல்லப்படுகின்ற பிராமண ஜாதியில் பிறந்த ஒருவர், தாழ்த்தப்பட்ட மக்களின் தோளில் கையை போட்டுக்கொண்டு சமத்துவமாக வாழ்ந்தார் என்றால், அது அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படும் கூடிய ஒன்று என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதுவும் ஜாதி ஏற்றத்தாழ்வு தலைவிரித்தாடிய சுதந்திரத்திற்கு முன்பு இருந்த காலகட்டத்தில் பிறந்த பாரதியார், ஜாதிகளுக்கு எதிராக வாழ்ந்து சுதந்திர போராட்ட கனலை மூட்டியவர்.


பாரதியார் வாழ்ந்த காலத்தில் பல தலைவர்கள், ஜாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க போராடினார்கள். அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. பாரதியார் முதல் ராஜாராம் மோகன்ராய் வரை அப்படித்தான் வாழ்ந்து மறைந்தார்கள்.


ஆனால், அதன்பிறகு வந்த தலைவர்கள் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்த தொடங்கி விட்டனர். இதன் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக, தமிழகத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடுகிறது. திருமாவளவன் போன்றவர்கள் இதில் உச்சம் கண்டுவிட்டார்கள். இவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை, பிற ஜாதியினரிடம் இருந்து பிரித்து அதன் மூலம், தங்களின் வளமான வாழ்க்கைக்கு சாலையமைத்துக் கொண்டனர்.


அனைத்து ஜாதியினரும் இணக்கமாக இணங்கி வந்த சூழ்நிலையை கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை திருமாவளவன் போன்றவர்களையே சாரும்.


பாரதியார், தாழ்த்தப்பட்டவர்களை நேசித்தார். அவர்களை சரிசமமாக நடத்தினார். இதனாலேயே தான் சார்ந்த பிராமண சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டார், ஒதுக்கி வைக்கப்பட்டார். இருந்தும்கூட அது பற்றி கவலை கொள்ளாமல், ஜாதி ஒழிப்பு போராட்டத்தை தொடர்ந்தார். அதில் அவர் தனி முத்திரை பதித்தார். ஆகவேதான் பாரதியார் போன்ற தலைவர்கள், மக்கள் மனங்களில், ஜாதியை கடந்து, இனத்தை கடந்து மொழியை கடந்து இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.


ஆனால் திருமாவளவன் போன்ற ஜாதி வெறி தலைவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை வைத்து பிழைக்கிறார்கள். தவிர அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை. பிற சாதி மக்களுடன் தாழ்த்தப்பட்ட மக்கள், இயக்கமாக வாழ்வதை திருமாவளவன் போன்ற தலைவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அப்படி ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகி விட்டால், அதன் பிறகு இவர்களுடைய ஜாதி வியாபாரம் முடிவுக்கு வந்துவிடும் என்பதே இதற்கு காரணம்.


திருமாவளவன் போன்றவர்களின் கீழ்த்தரமான ஜாதி அரசியலால், தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் இன்று தங்களின் சாதியை உயர்த்திப் பிடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். தேசத் தலைவர்கள் எல்லாம் இப்போது ஜாதித் தலைவர்கள் ஆக்கப்பட்டு விட்டனர்.


“சட்ட மாமேதை” டாக்டர் அம்பேத்கர், தலித் சங்கத்திற்கு தலைவராக்கப்பட்டுவிட்டார். “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடிய பாரதியார், இன்று பிராமணர்கள் சங்கத்திற்கு தலைவராக்கப்பட்டு விட்டார். “தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்று வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்கத்தேவர், தேவர் சாதி சங்கத்திற்கு தலைவராக ஆக்கப்பட்டு விட்டார். “செக்கிழுத்த செம்மல்” வ.உ.சிதம்பரனார், பிள்ளைமார் சங்கத்திற்கு தலைவராகபட்டுவிட்டார். “கல்வி கண் திறந்தவர்” கர்மவீரர் காமராஜர். அவர், நாடார் சங்கத்திற்கு தலைவராக பட்டு விட்டார்.


இப்படி தமிழகம் மாறிப் போனதற்கு மூல காரணமாக இருந்தவர் ஈவேரா. தொடர்ந்து அதை உச்சநிலைக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமையை திருமாவளவன் பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து ஜாதி வெறியை ஊட்டி வளர்த்து வருகிறார்.


திருமாவளவன் தனது ஜாதி வெறியின் காரணமாக அவர் சார்ந்த சமுதாய இளைஞர்களை, ரவுடிகளாகவும், கேடிகளாகவும் உருவாக்கி வருகின்றார். ஆனால் அவரைப் போன்ற மற்றொரு தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, அவர் சார்ந்த சமுதாய இளைஞர்களுக்கு, ஐஏஎஸ் பயிற்சி அளித்து வருகிறார்.


மொத்தத்தில் ஜாதியை ஒழிக்க பாடுபட்ட பாரதியார்கள், நமது நாட்டிற்கு இப்போதைய தேவையாக உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஜாதி வெறியை தூண்டி, அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற திருமாவளவன்கள், புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை இன்றைய சமுதாயம் உணரத்தொடங்கி உள்ளது.


இது வரவேற்கத்தக்கது.


Next Story