Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் இடையே மோதல்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் இடையே மோதல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 5:51 AM GMT


திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி , பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் அப்போது காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்ராஜ் பிரிவு நிர்வாகி பாலசுப்பிரமணி தனது பெயரை மாவட்ட தலைவர் குறிப்பிட வில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.



 இதனால் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் ராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, மேடையில் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனால் பேசாமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி நின்று போனார்,கே எஸ் அழகிரி முன்னிலையிலேயே இருதரப்பினர் மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது,இதைத் தொடர்ந்து பேசிய கே எஸ் அழகிரி மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக கூறினார்.


Next Story