Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக தி.மு.க மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக தி.மு.க மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 5:39 AM GMT


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதற்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள் அன்று தொடங்கியது இந்நிலையில் திமுக சார்பில் புதிதாக ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது, மனுவில் கூறப்பட்டுள்ளதாவது வார்டு மறுவரை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கான உள்ளாட்சி தேர்தலில் முறையாக பின்பற்ற வேண்டும் என சட்டம் உள்ளது ஆனால் தமிழக தேர்தல் ஆணையம் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ் பெண்கள் எஸ்சி எஸ்டி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அழைக்காமல் தேர்தலை நடத்துவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



நேற்று ராஜாஜியின் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் , ஸ்டாலின் அவர்கள் தீர்ப்பு வந்த பிறகு இது வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு இதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார் ஆனால் இப்போது ஏன் நீதிமன்றம் செல்கிறார் என ஸ்டாலினை சாடினார் அமைச்சர் ஜெயக்குமார்,இந்நிலையில் இட ஒதுக்கீட்டு முறையாக செயல்படுத்தாமல் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடப்பதாக கூறி திமுக தாக்கல் செய்த மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


Next Story