Top
undefined
Begin typing your search above and press return to search.

மக்கள் அரசுக்கு எதிராக திசை திரும்பினால் நாடு என்ன நிலைக்கு ஆளாகும்.? ஹாங் காங் புரட்சி சொல்லும் பாடம்.!

மக்கள் அரசுக்கு எதிராக திசை திரும்பினால் நாடு என்ன நிலைக்கு ஆளாகும்.? ஹாங் காங் புரட்சி சொல்லும் பாடம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 3:01 AM GMT


ஹாங் காங்கில் கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது, ஆறு மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய நாடுகடத்தும் சட்டத்தை எதிர்த்து ஹாங் காங்கில் மக்கள் போராட்டம் வெடித்து. போராட்டத்தின் காரணமாக அந்த சட்டம் திரும்ப பெற பட்டது, அதை தொடர்ந்து ஹாங் காங்கில் ஆட்சி செய்து வரும் சீன அரசின் ஆதரவாளரான கேர்ரி லாம் ஐ எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்க நடைபெற்று வருகிறது, சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல்களில் ஹாங் காங் ஜனநாயக கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து ஹாங் காங்கின் போராட்ட காரர்களுக்கு உலக நாடுகளிடம் ஆதரவு பெருகி வருகிறது, இதை அடுத்து ஹாங் காங்கில் போராட்டம் வெடித்து ஆறு மாதங்கள் ஆனதை ஒட்டி, லட்சக்கணக்கானவர்கள் சென்ட்ரல் பார்க் இல் திரண்டனர். கருஞ்ச்சட்டை அணிந்த படி சீனாவிற்கும் காவலர்களுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி கொண்டு பேரணியாக சென்றனர்.


கடந்த ஆறு மத காலமாக போராட்டத்தின் போது காவல் துறையினரின் கொடூர தாக்குதலுக்கு ஆளானவர்கள்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர், பலர் மரணமடைந்து இருக்கின்றனர், ஆயிரக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருகிறது. காவல் துறையின் இந்த அது மீறலை விசாரிக்க விசாரணை கமிசன் அமைக்க கோரி போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அனால் கேர்ரி லாம் இது வரையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைக்கு செவி மறுக்க வில்லை. இதனால் இந்த ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற பேரணி இதுவரை ஹாங் காங் வரலாற்றல் நடந்திடாத வகையில் மிக பிரமாண்டமாக இருந்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. " இந்த போராட்டத்தை குறித்து பேசிய ஹாங் காண்கின் அரசியல் பார்வையாளர் சின் ஜீவ்ங் "கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவிவேறாமல் போராட்டத்தை கைவிடுவது மக்களின் போராட்ட மனப்பான்மையை அரசும் காவல் துறையும் அடக்கி நீர்த்துப்போக செய்துவிட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடும். அதானால்
இந்த போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து நடைபெறுவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.


மேலும் மனித உரிமைகள் நாளான டிசம்பர் 10 இல் மனித உரிமைக்கான முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் 1948 இல் வலியுறுத்தியதை இந்த ஆர்ப்பாட்டம் நினைவு கூர்ந்தது.


Next Story