Top
undefined
Begin typing your search above and press return to search.

மருந்தின் வீரியத்தை தாண்டி விட்டதா கிருமி..? 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எட்டிப்பார்க்கும் கொடிய நோய் - அதிர்ச்சியில் மலேசியா!

மருந்தின் வீரியத்தை தாண்டி விட்டதா கிருமி..? 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எட்டிப்பார்க்கும் கொடிய நோய் - அதிர்ச்சியில் மலேசியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 3:09 AM GMT


போலியோ நோயை முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் மலேசியாவில் போலியோ நோய் தாக்கிய குழந்தை பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தெற்காசியாவில் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் 1992 வரை இந்த நோய் தாக்கம் இருந்தது. மலேசிய சுகாதார துறை கடந்த 27 வருடங்களுக்கு பிறகு இந்த நோய் தாக்கத்தை கண்டறிந்து கூறியுள்ளது. 2000 ஆவது ஆண்டில் மலேசிய போலியோ இல்லாத நாடக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


போலியோ நோய் “போலிமயிலிட்டிஸ்” என்னும் கிருமியால் ஏற்படுகிறது. இது நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மற்ற வயதினரை விட ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இந்த நோய் எளிதாக பாதிக்கும். இது பரவக்கூடிய ஒரு நோய். இது பெரும்பாலும் உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவும், மனித கழிவு மற்றும் எச்சில் மூலம் பரவும். சுகாதார குறைபாடுகள் உள்ள இடத்தில குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.


இந்த போலியோ நோய் கி மு 1400 வருடங்களுக்கு முன்பாகவே எகிப்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன 1994 இல் மேற்கத்திய நாடுகள் இந்த நோயை முற்றிலுமாக ஒழித்துவிட்டன 2014 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இந்தியாவை போலயோ இல்லாத நாடக அறிவித்தது குறிப்பிடதக்கது.


Next Story