Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை! மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்!

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை! மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்!

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை!  மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 12:49 PM GMT

கடலூர், திருப்பாதிருபுலியூர், பான்பரி வணிக சந்தையில் காய்கறி மொத்த வணிகராக இருப்பவர் பக்கீரான். இவர் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர். தற்போது வெங்காயம் பேசு பொருளாகவும் அரசியலாகவும் மாறியுள்ளதால், அதன் மூலம் விளம்பரம் தேட முயன்றார்.

இவர், நேற்று மாலை ஒருகிலோ வெங்காயம் ரூபாய் 25-க்கு விற்பனை செய்யப்படும் என்று தனது கடையில் எழுதி வைத்தார். இதை அறிந்த பொது மக்கள் பக்கீரான் கடையில் குழுமினர். பொதுமக்கள், ரூபாய் 25 க்கு ஒருகிலோ வெங்காயம் என்றதும் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசபட்டது.

இந்த நிலையில், கடலூர் முதுநகர் பக்தவசலம் வணிக சந்தை அருகே இன்று காலை ஒருகிலோ வெங்காயம் ரூபாய் 10-க்கு விற்பனை செய்து மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் பக்கீரான்.

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை!  மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்!

இதனால் முதுநகர் காய்கறி வணிகர்கள் அதிர்ந்தனர். இதனால் முதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக வலை தளத்தில் பரவியது. செய்தி சேனல்களில் தலைப்பு செய்தியாகவும் இடபிடித்தது.

கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ பெரிய பல்லாரி வெங்காயம் ரூபாய் 80க்கும், சிறிய பல்லாரி வெங்காயம் ரூபாய் 60க்கும், சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தரமற்ற வெங்காயத்தை விளம்பர நோக்கத்தில் பக்கீரான் 10 ரூபாய்கு விற்பனை செய்துள்ளார் என்கின்றனர் சக வியாபாரிகள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News