Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கையில் மீண்டும் இன பிரச்சனை தலை தூக்குமா ? பத்திரிக்கையாளர்களின் கணினி வரை வேவு பார்க்கப்படும் சம்பவம்.!

இலங்கையில் மீண்டும் இன பிரச்சனை தலை தூக்குமா ? பத்திரிக்கையாளர்களின் கணினி வரை வேவு பார்க்கப்படும் சம்பவம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Dec 2019 3:16 AM GMT


கோத்தபாய ராஜபக்ஷேவின் தேர்தல் வெற்றி பல காரணங்களுக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சாதகமானதாக இருந்தாலும், இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் கோத்தபாய வின் வெற்றியும் அதற்கு பிறகான நடவடிக்கைகளும் ஒரு வித மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இவர் இலங்கையின் ராணுவ அமைச்சராக 2005 இல் இருந்து 2015 வரை பணியாற்றி உள்ளார்.  இவர் மீது போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தமிழ் மக்களை பொறுத்த வரை தேசிய கட்சியின் “சஜிதா பிரேமதாசாவை” தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.  தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் இந்த தேர்தலில் அதிகப்படியாக வாக்களித்தார்கள் வட கிழக்கு பகுதியின் ஓட்டுகள் அனைத்துமே பிரேமதாசாவிற்கு சென்றது   அனால் கோத்தபாயாவிற்கு தென்பகுதி சிங்கள ஓட்டுகள் பலமாக அமைந்து விட்டது மைத்திரி பாலா சிறிசேனவின் காலத்தில் இருந்த போர் குற்றங்களுக்கான விசாரணை மற்றும் நடவடிக்கை பற்றிய நம்பிக்கை இப்போது கொஞ்சம் தளர்ந்து பொய் விட்டது போல் காணப்படுகிறது.  கோட்டபய ராஜபக்ஷே வெற்றி பெற்ற பிறகு பேசிய முதல் கூட்டத்தில், பௌத்த தத்துவங்களின் வழிமுறையில் ஆட்சி நடத்த போவதாகவும் பௌத்த சிங்கள கலாச்சாரத்தை வலிமைப்படுத்தி போவதாகவும் பேசியிருக்கிறார்


சென்ற
ஆட்சி காலத்தில் நடந்த போரில் தான் ஆற்றிய பங்கு பற்றியும் பெருமையாக கூறினார். இந்த
நிகழ்ச்சி அனுராதபுரத்தில் சிங்கள மன்னன் துட்டகைமுனு நிர்மாணித்த நகரில் நடந்தது இந்த மன்னன் தமிழக மன்னன் எல்லாளனை தோற்கடித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோத்தபாயவின்
கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வெளி நாடு செல்ல தடை விதித்திருக்கிறது தற்போதையை அரசு. சிங்கள
தமிழ் ஊடகங்கள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றன. சில
பத்திரிகையாளர்கள்
தங்கள் கணினிகளை காவல்துறையின் பார்வைக்கு உட்படுத்த நிர்பந்திக்க படுகிறார்கள்!. தமிழர்களுக்கு எதிரான
கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து கொள்ள படுகிறது,
சில தமிழர்கள் கோத்தபாயாவிற்கு எதிராக வாக்களித்ததற்காக தாக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது பதவி ஏற்றிருக்கும் கட்சியும், ஜனாதிபதியும் இனி வரும் காலங்களில் எடுக்கும் நடவடிக்கைகளை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். சில வருடங்களாக தலை தூக்காமல் இருந்து வரும் இன பிரச்சனை இப்பொது மீண்டும் தலைதூக்கி விடுமோ என்ற பயம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கிறது


Next Story