Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு தொடர்பான 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி! காங்கிரஸ், தி.மு.க பிழைப்பில் விழுந்தது மண்!

அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு தொடர்பான 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி! காங்கிரஸ், தி.மு.க பிழைப்பில் விழுந்தது மண்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2019 12:24 PM GMT


அயோத்தியில் ராமர் பிறந்த இடம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் இந்து - முஸ்லிம் இடையே பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், மக்களைப் பிரித்து மத கலவரத்தை தூண்டி குளிர்காய நினைத்த மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, திருமாவளவன்,வைகோ, கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் கட்சிகள், இதன் மூலம் மிகப்பெரிய மதக் கலவரம் வெடிக்கும், அதில் குளிர் காயலாம் என்று எதிர்பார்த்தது. ஆனால் நடக்காமல் போய்விட்டது. அவர்களின் நினைப்பில் மண்ணை போடுகின்ற வகையில் நாடே அமைதியாக இருந்தது. ஒரு சிறு அசம்பாவிதம்கூட ஏற்படவில்லை. அனைத்து தரப்பு மக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். வரவேற்றனர். பாராட்டினர்.


இதனால் வெறுத்துப்போனவர்களின் தூண்டுதலால், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பதை இன்று முடிவு செய்வதாக கோர்ட் அறிவித்து இருந்தது.


இந்த நிலையில் இன்று (12.12.2019) அயோத்தியில் ராமர் பிறந்த இடம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்திருந்த 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.


இதனால் அயோத்தி விவகாரத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், திருமாவளவன் போன்றவர்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது.


Next Story