Top
undefined
Begin typing your search above and press return to search.

திருச்சியில் குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்த கிறிஸ்டோபர் கைது!

திருச்சியில் குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்த கிறிஸ்டோபர் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2019 10:06 AM GMT



குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
42 வயதான இவன் திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவன். ஐ.டி.ஐ படித்துள்ளான். ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறான்.
இவன், பேஸ்புக், வாட்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்துள்ளான்.


நிலவன், நிலவன், ஆதவன் போன்ற பல்வேறு போலி பெயர்களில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ், பேஸ்புக்கில் ஆபாச படங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக 15-க்கும் அதிகமான நபர்களுக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை கிறிஸ்டோபர் அல்போன்ஸ் அனுப்பி உள்ளான்.



போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டோபர் அல்போன்ஸ் விசாரணைக்குப்பின், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.


Next Story