Top
undefined
Begin typing your search above and press return to search.

கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது!

கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2019 7:27 AM GMT


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பிஞ்சனூர் ஊராட்சி. அதே கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 2017 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது ஊர் கிராமம் சார்பில் ஏலம் விடப்படுள்ளது. இந்த ஏலம் 16 லட்சம் வரை சென்றுள்ளது. இதனை சேகர் என்பவர் பணம் தருவதாக கிராம கூட்டத்தில் கூறி முன்பணமாக 8 லட்சம் வழங்கியுள்ளதாக கூறபடுகிறது.


அந்த ஆண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்த முன் பணம் அப்படியே இருப்பு வைக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பிஞ்சனூர் கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஊர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே போட்டியிட்ட சேகர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





இதனை குறித்து அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் கூறுகையில் ஏற்கனவே 2017ம் ஆண்டு ஏலம் விடப்பட்டு அதனை எங்கள் ஊரில் நடைமுறையில் வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story