Top
undefined
Begin typing your search above and press return to search.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கூலி தொழிலாளியின் மகள் தங்கம் வென்றார்!

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கூலி தொழிலாளியின் மகள் தங்கம் வென்றார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2019 12:46 PM GMT


ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளி மாணவி சுபாஷினி அவர் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார்.


தர்மபுரி மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 46 – 48 கிலோ எடைப்பிரிவில் ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி சுபாஷினி கலந்து கொண்டார். இதில் 5 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றதில் நாக்அவுட் முறையில் வென்று மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.





இம்மாணவி சுபாஷினி சென்ற ஆண்டும் இதே மாநில அளவில் ஈரோட்டில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த மாணவியின் பயிற்சியாளர் சத்தியராஜ், பள்ளித்தலைமையாசிரியர் வடிவேலு , கராத்தே மாஸ்டர் சென்சாய் வி ரங்கநாதான் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கேசவன் , பள்ளி ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


இவர் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. மாணவி சுபாஷினிக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகையும் நிதி உதவியும் மாவட்ட நிர்வாகம் மூலம் கிடைக்குமா என மாணவி எதிர்பாக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களும் மாவட்ட ஆட்சியார்க்கும் மற்றும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story