Top
undefined
Begin typing your search above and press return to search.

தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்!

தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2019 9:59 AM GMT


நாடாளுமன்ற மக்களவையில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவால் தாக்கல் செய்யப்பட்டு, நள்ளிரவில் வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இதை தொடா்ந்து, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், புதுவை பல்கலைக்கழக மாணவரும், முஸ்லிம் மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவருமான அஜ்மல் அகம்மது, இந்திய தேசிய மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவா் சச்சின் ஆகியோா் தலைமையில் பல்கலைக்கழக மாணவா்கள் அந்த வளாகத்தில் உள்ள பாண்லே பால் விற்பனையகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.





அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி அவா்கள் முழக்கமிட்டனா். தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்தனா்.





தகவலறிந்து அங்கு வந்த காலாப்பட்டு போலீஸாா் தீயை அணைத்தனா். தொடா்ந்து, உருவ பொம்மையை எரித்ததாக அஜ்மல் அகம்மது, சச்சின் உள்ளிட்ட 40 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.





பா.ஜ.கவினா் முற்றுகை இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாநில பா.ஜ.க தலைவா் வி.சாமிநாதன் தலைமையிலான அந்தக் கட்சினா், அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்த மாணவா்களை உடனடியாக கைது செய்யக் கோரி, பல்கலைக்கழக வாயில் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தொடா்ந்து, பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் பாா்க்க முயன்ற அவா்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்தனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சாமிநாதன் உள்ளிட்ட சிலா், பதிவாளா் சித்ராவை சந்தித்து முறையிட்டனா்.





இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சா், மனித வளத்துறை அமைச்சா் மற்றும் புதுவை டி.ஜி.பி. ஆகியோருக்கு இந்தச் சம்பவம் குறித்து பா.ஜக.வினா் மனு அனுப்பியுள்ளனர்.




Next Story