Top
undefined
Begin typing your search above and press return to search.

முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் பெற்றோருடன் மாமனார், மாமியாரையும் சேர்ப்பு! கவனிக்காவிட்டால் மருமகன், மருமகளுக்கும் கூட சிறை தண்டனை!

முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் பெற்றோருடன் மாமனார், மாமியாரையும் சேர்ப்பு! கவனிக்காவிட்டால் மருமகன், மருமகளுக்கும் கூட சிறை தண்டனை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 7:44 AM GMT


12 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களை முறையாகப் பராமரிப்பது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது.


பெற்றோர் மட்டுமல்லாமல் இனி மாமனார், மாமியாரையும் சரியாகக் கவனிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் இது தொடர்பான மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதன்படி பெற்றோர்களைப் போலவே மாமனார், மாமியாருக்கும் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பழைய மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி மாமனார், மாமியாரைச் சரியாகக் கவனிக்காத மருமகனுக்கும் மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் இந்தச் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது. அதன்படி மாமனார், மாமியாருக்கான பராமரிப்புச் செலவு உச்சவரம்பு பத்தாயிரம் ரூபாய் என்பது நீக்கப்பட்டுள்ளது.


இனி அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் அதிகத் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அம் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


Next Story