Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்த, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன் அபார வெற்றி!

பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்த, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன் அபார வெற்றி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 7:02 AM GMT


பிரிட்டன் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (12.12.2019) நடந்தது. இதில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெரிமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.


மொத்தமுள்ள 650 இடங்களில் 628 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறுதிப் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 349 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டி உள்ளது.


இதனால் ஓட்டு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையும் முன்பதாகவே, பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்று, தனது பிரதமர் பதவியை தக்க வைத்துள்ளார்.


போரிஸ் ஜான்சன், நமது பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். தேர்தல் பிரச்சாரத்தின்போது கடந்த 9-ஆம் தேதி லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.




https://twitter.com/ANI/status/1203846969656889346


அதன் பிறகு அங்கிருந்த இந்தியர்களிடம் பேசிய போரிஸ் ஜான்சன், “புதிய இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டமைத்து வருகிறார். நரேந்திர மோடியின் இந்த முயற்சிக்கு எனது தலைமையிலான பிரிட்டன் அரசு முழுமையாக ஆதரவு அளிக்கும்” என்று பேசி வாக்கு திரட்டினார்.




https://twitter.com/the_hindu/status/1203685681484226561


நமது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சொல்லி வாக்கு சேகரித்த போரிஸ் ஜான்சனுக்கு பிரிட்டன் வாழ் இந்தியர்கள் பேராதரவை வழங்கியுள்ளனர்.


வெற்றி வாகை சூடிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சனுக்கு, நமது பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,"மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் பிரதமராக வெற்றி வாகை சூடிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள், இந்திய -பிரிட்டன் உறவில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1205360968810803200

Next Story