Top
undefined
Begin typing your search above and press return to search.

உள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட தி.மு.க; துரத்தியடித்த சுப்ரீம் கோர்ட்!

உள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட தி.மு.க; துரத்தியடித்த சுப்ரீம் கோர்ட்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 9:58 AM GMT


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த 6-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.


இந்த நிலையில் எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து போராடி வருகிறார். அவர் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார். பல்வேறு தனிநபர்கள் மூலமாகவும் ஸ்டாலின் வழக்கு தொடர ஏற்பாடு செய்து இருந்தார். தமிழக உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த மொத்தம் 10 மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு இருந்தன.


இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு, தமிக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுகவின் மனு உள்பட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.


இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். அதனை ஐகோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது.


இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு திமுக மீண்டும் ஒருமுறை பின்வாசல் வழியாக சுப்ரீம் கோர்ட் கதவைத் தட்டியது. அதாவது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மீண்டும் தலையிட தேவையில்லை என்று கூறி திமுகவின் புதிய மனுவையும் தள்ளுபடி செய்தனர்.


இதனால் வெறுத்துப்போன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தே தீரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் பலத்த அடி கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்ட மு.க.ஸ்டாலின், எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுத்து விட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து உள்ளன.


Next Story