Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னைக்கு மேலும் மழை உண்டு!அடுத்த 2 நாட்களுக்கு கையில் குடையை மறக்காமல் எடுத்துச் செல்ல அறிவுரை!

சென்னைக்கு மேலும் மழை உண்டு!அடுத்த 2 நாட்களுக்கு கையில் குடையை மறக்காமல் எடுத்துச் செல்ல அறிவுரை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 9:19 AM GMT


பொதுவாக கார்த்திகை தீபம் முடிந்து விட்டாலே இனிமேல் மழை இருக்காது என்றும், பனிப்பொழிவு தொடங்கும் எனவும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனுபவ ரீதியான ஒரு நம்பிக்கை உண்டு.


இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது :-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும்.


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை கூட பெய்ய வாய்ப்புள்ளது.


அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் சற்று மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளதை அடுத்து அடுத்த 2 நாட்களுக்கு மக்கள் கையில் குடையுடன் அலுவலகம் செல்வதே நல்லது என கூறப்படுகிறது.


Next Story