Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆண்களை மயக்கி உல்லாச வாழ்க்கை! பல லட்சம் ரூபாயை பறித்த, தி.மு.க முன்னாள் பஞ்சாயத்து தலைவி கைது!

ஆண்களை மயக்கி உல்லாச வாழ்க்கை! பல லட்சம் ரூபாயை பறித்த, தி.மு.க முன்னாள் பஞ்சாயத்து தலைவி கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 5:19 AM GMT


ஈரோடு மாவட்டம் காளியன்கராய பாளையத்தை சேர்ந்தவர் செந்தாமரை. 44 வயதான இவரது கணவர் சதாசிவம். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செந்தாமரை திமுகவை சேர்ந்தவர். இவர் பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்து உள்ளார்.
இந்த நிலையில் செந்தாமரையின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை சதாசிவம் விவாகரத்து செய்துவிட்டார்.



இதன்பிறகு செந்தாமரை பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்து இஷ்டம் போல் வாழ்ந்து உள்ளார் மது பழக்கமும் இவருக்கு உண்டு. 
இவர் தனது அழகை காட்டி மயக்கி உல்லாசமாக இருந்துவிட்டு, அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தையை அள்ளி வீசுவார். பின்னர் அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை அபேஷ் செய்துவிட்டு அடுத்த நபரை தேடி சென்றுள்ளார்.



துபாயில் வேலைபார்க்கும் ராஜதுரை என்பவரை மயக்கி பணம் நகையை பறித்து விட்டு அவரிடமிருந்து ஓட்டம் பிடித்து விட்டார். அதன்பிறகு சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த போலீஸ் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகி, அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணத்தையும், நகையும் அபகரித்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.


இதேபோல், சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த 39 வயதான தொழிலதிபர் பாலச்சந்தரை மயக்கி அவரிடமிருந்து மட்டும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அவதரித்துள்ளார். இதுதவிர நகைகளையும் பறித்துள்ளார். சதாசிவத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி இறந்து விட்டார்.
தொழில் தொழிலதிபர் சதாசிவத்தின் அலுவலகத்தில் செந்தாமரை முதலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது மயூர் வர்ஷினி என்று தனது பெயரை கூறி உள்ளார். பெங்களூருவை சேர்ந்தவர் என்றும், 38 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்றும் அவரை நம்ப வைத்துள்ளார். 



பின்னர் சதாசிவத்தின் நெருக்கமாக பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நம்ப வைத்து உள்ளார். அப்போதுதான் தனது பெயர் செந்தாமரை என்றும், தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும் கூறி, நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். சதாசிவத்தின் கிரெடிட் கார்டையும் இவரே பயன்படுத்தி தேவையான பணத்தை பிடுங்கி உள்ளார். இது தவிர அவரது நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கி உள்ளார்.



இப்படி பல லட்சம் ரூபாய் பணத்தையும், நகையையும் இழந்தபிறகுதான் சதாசிவத்திற்கு செந்தாமரை பற்றிய உண்மை தெரிந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சதாசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செந்தாமரையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.


Next Story