Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 போக்குவரத்து மையங்களை இணைக்கும் புதிய சுரங்கப்பாதை திறப்பு! மோடி அரசின் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கு மக்கள் பாராட்டு!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 போக்குவரத்து மையங்களை இணைக்கும் புதிய சுரங்கப்பாதை திறப்பு! மோடி அரசின் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கு மக்கள் பாராட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 8:59 AM GMT


ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் மக்களை இணைக்கும் வகையில், புதிய சுரங்கப்பாதை தற்போதைய மோடி அரசின் ரயில்வே துறை வழி காட்டுதலின் அடிப்படையில் தொடங்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம், போக்கு வரத்து நெருக்கடி நேரத்தில், பூந்தமல்லி சாலை (இ.வி.ஆா் சாலை), பல்லவன் சாலைகளில் வாகன போக்குவரத்தை நெரிசலை குறைப்பதற்கு இந்தப் புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும்.


மெட்ரோ ரயில் பணிகளின் ஒருபகுதியாக, சென்னை மெட்ரோ, பூங்கா நகா் (பாா்க் டவுன்) நிலையம், பூங்கா ரயில் நிலையம், ராஜீவ் காந்தி மருத்துவமனை ஆகியவற்றுடன் சென்ட்ரல் ரயில்நிலையத்தை இணைக்க ஒரு சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் திட்டமிடப்பட்டது. அதன்படி, பணிகள் தொடங்கி நடந்து வந்தன.


இதற்கிடையில், சென்னை விமான நிலையம்-நேரு பூங்கா வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் வரை கடந்த ஆண்டு மே மாதத்தில் விரிவாக்கப்பட்டது. இருப்பினும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சுரங்கப்பாதை இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதன் விளைவாக, சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து பயணிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடக்க கால்நடையாக நடந்து செல்ல வேண்டும் அல்லது பூங்கா நிலையத்துடன் சென்ட்ரலை இணைக்கும் சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு சில மாதங்களுக்கு பிறகு, பூங்கா நகா் நிலையத்துடன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் ஒரு வழிப்பாதை உருவாக்கப்பட்டது.


இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையம் (எம்ஆா்டிஎஸ்) மற்றும் புகா் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் மக்களை இணைக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை பெற்ற மோடி அரசின் ரயில்வேத்துறை மக்களின் நலனுக்காக வேண்டி புதிய ஆலோசனைகளை ஏற்று புதிய சுரங்கப்பாதைக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலான நேரத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஈ.வே.ரா. சாலை) , பல்லவன் சாலையில் வாகன போக்குவரத்தை நெரிசலை குறைப்பதற்கு இந்தப் புதிய சுரங்கப்பாதை உதவியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


இது குறித்து மக்கள் கூறுகையில்: தமிழக அரசியலை பொறுத்தவரை முன்பிருந்த அரசு செய்த நல்ல திட்டங்களை பின்னால் வரும் அரசு செயல்படுத்தாது. அரசியல் அடிப்படையில் கட்சி சுயநலன்களுக்காக செயல்படுவார்கள். ஆனால் மத்தியில் உள்ள பாஜக அரசு முந்தைய அரசு தொடக்கி வைத்த திட்டம் என்றாலும் பொது மக்கள் வசதிக்காக அதை மேலும் மேம்படுத்தி திட்டங்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது என்றனர்.


Next Story