Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடாளுமன்ற தாக்குதல் 18 ஆம் ஆண்டு நினைவு தினம், பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் அஞ்சலி!

நாடாளுமன்ற தாக்குதல் 18 ஆம் ஆண்டு நினைவு தினம், பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் அஞ்சலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 9:51 AM GMT


2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ஒரு வாகனத்தில் வந்த லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது சேர்ந்த தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள்  உள்ளே நுழைந்த முற்பட்டபோது அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்திய போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதலில் காவலர்கள் 9 பேர் உயிரிழந்தனர் மேலும் 11 பேர் காயமடைந்தனர் காவல் படையினர் திருப்பி சுட்டதில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



இதனை ஒட்டி 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவாக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் படங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.




https://twitter.com/narendramodi/status/1205407663137288192?s=19



Next Story