Top
undefined
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளுக்கு குறிவைக்கப்பட்டதில் பொது மக்களிலும் சிலர் இறந்தனர் - உண்மையை ஒப்புக்கொண்ட மியான்மர்.!

தீவிரவாதிகளுக்கு குறிவைக்கப்பட்டதில்  பொது மக்களிலும் சிலர் இறந்தனர் - உண்மையை ஒப்புக்கொண்ட மியான்மர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 2:56 AM GMT


மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் நோக்கில் ராணுவம் செயல்படவில்லை என்று சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டின் ஆலோசகர் ஆங் சங் சூ கி தெரிவித்துள்ளார்.


மியான்மரின் ராக்கன் மாகாணத்தில் ரோஹிந்த்ய முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இந்த சம்பவங்களை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் பங்கு பெற்ற ஆங் சங் சூ கி 2017 பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பொது மியான்மார் ராணுவம் கடுமையாக நடந்து கொண்டது தான் என்றாலும் இனப்படுகொலை செய்யும் நோக்கில் ராணுவம் ஒரு போதும் இருந்ததில்லை என்று தெரிவித்தார்.


இந்த வழக்கை தொடர்ந்து உள்ள காம்பியா நாடு தவறான தகவல்களின் பேரில் வழக்கு தொடர்ந்துள்ளது . ரோஹிந்த்ய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ராணுவம் நடவடிக்கை மேற்கொண்ட போது சர்வதேச சட்டங்களை மீறி சில நடவடிக்கைகள் எடுத்தார்கள். தீவிரவாதிகள் குறிவைக்கப்பட்டு பொது மக்களிலும் சிலர் இறக்க நேர்ந்தது, அனால் இவை ஒரு விபத்து போல் நடந்தே அன்று இன அழிப்பிற்கான நோக்கதோடு நடக்கவில்லை.


வங்காளதேசத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹிந்த்ய முஸ்லிம்கள் மியான்மரில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்கள், அவர்களை மியான்மார் அரசு குடிமக்களாக அங்கீகரிக்க மாறுகிறது. அவர்கள் புறக்கணிக்கப்படுபவர்களாகவும், உரிமை மறுக்க படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ரோஹிந்த்ய விடுதலை படையினருக்கும் காவல் துறை மற்றும் ராணுவத்தினர் இடையையும் அடிக்கடி சண்டை நடப்பது உண்டு.


கடந்த 2017 இல் இந்த அமைப்பினர் போலீசார் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தினார்கள். அதற்க்கு பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். வன்முறைக்கு அஞ்சி சுமார் 7 லச்சம் மக்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


Next Story