Top
undefined
Begin typing your search above and press return to search.

வெற்றிகரமான நிறுவனங்களின் லோகோவிற்கு பின்னிருக்கும் ரகசியம்!

வெற்றிகரமான நிறுவனங்களின் லோகோவிற்கு பின்னிருக்கும் ரகசியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 5:48 AM GMT


வெறும் லோகோ (இலட்சினை)  தானே என்று எளிமையாக கடந்துவிடும் சின்னங்களுக்கு பிறகு பல சுவரஸ்யமான காரணங்கள் உள்ளன. ஒரு சின்ன வளைவு, கோடு, வண்ணம் என அனைத்துக்கும் பல காரணங்கள் இருந்துள்ளன. அவற்றில் சில இங்கே.





பெரும்பாலனவர்கள் ஹுண்டாய் நிறுவனத்தின் இலட்சினையை பார்க்கும் பொழுது அது அப்பெயரின் முதல் எழுத்து என நினைத்திருப்போம். உண்மையில் லேசாக சாய்ந்த அந்த “H” என்ற எழுத்து இரண்டு மனிதர்கள் சந்தித்து கொள்வதின் குறியீடு.






அடிடாஸ் என்கிற பெயர் அதன் நிறுவனரான அடால்ப் டாஸ்லர் என்பவரின் பெயரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிவோம். அதன் இலட்சினை பல முறை சிறு சிறு மாற்றங்கள் கண்டிருந்தாலும். தற்சமயம் மூன்று கோடுகள் ஒரு முக்கோண வடிவத்திலிருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த முக்கோணம் ஒரு மலையையும், சவாலையும் குறிக்கும் குறியீடு. அவர்களின் வாடிக்கையாளர்களான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சவாலை சந்திப்பவர்கள் என்பதால் இப்படி வடிவமைக்கப்பட்டதாம்.





ராப் யானவ் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவன இலட்ச்சினையின் வடிவமைப்பாளர். அவர் எப்படி இப்படி வடிவமைக்கும் சிந்தனை வந்தது என்பதை ஒருமுறை விளக்கியுள்ளார். “ஒரு கூடை ஆப்பிளை வாங்கி வந்து அதை மேஜையில் வைத்து ஒரு வாரம் விதவிதமாக வரைந்து பார்த்தாராம். குறிப்பாக எப்படி எளிமையாக அனைவரையும் கவரும் விதத்திலும் ஒரு ஆப்பிளை வரைவது என்று சிந்திக்கும் பொழுது ஒரு கடி கடித்த ஆப்பிளை எதர்ச்சேயாக வரைய நேர்ந்துள்ளது. பின்பு தான் ஆங்கிலத்தில் கடி என்பதற்க்கும் “bite” என்று பொருள்படுவதும் அதையே எழுத்துக்கள் மாற்றி போட்டால் அவர்களின் அடிப்படை கணினி தொழிலை குறிக்கும் “byte” என்ற பொருள்படுமாறு அமைந்ததும் கூடுதல் சிறப்பு.





சோனி வையோ என்கிற ஆங்கில எழுத்தின் முதல் இருஎழுத்து “அனலாக்(analog)” என்கிற சிக்னலின் சின்னத்தையும் கடைசி இரு எழுத்து “I” மற்றும் “o” டிஜிடல் சிக்னலான ஒன்று மற்றும் பூஜ்ஜிய என்கிற எண்ணை குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.





இதை முதன்முறை பார்த்தால் இதிலென்ன பெரிய விசேஷம் என தோன்றும். ஆனால் அந்த அமேசான் என்கிற வார்த்தையின் கீழுள்ள ஆரஞ்சு நிற குறி ஒரு புன்னகையின் அடையாளம். மேலும் “A” என்கிற எழுத்தில் அந்த குறி துவங்கி “Z” என்கிற எழுத்தில் முடிகிறது. அதன் பொருள் எங்களிடம் “A to Z” எல்லாம் கிடைக்கும் என்கிற வாக்குறுதியை தருவதாக அமைக்கப்பட்டுள்ளது.





இது ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தின் இலட்சினை. இதில் "BR" என்கிற எழுத்தின் பிங்க் வண்ண பகுதியை மட்டும் பார்த்தால் 31 என்கிற எண் வரும். இதை மையமாக வைத்தே அத்தனை ப்ளேவர்களில் ஐஸ்கிரீம் தயாரித்தார்களாம்.





ஜப்பானிய கார் நிறுவனத்தின் இந்த இலட்சினை பெரும்பாலும் பார்ப்பதற்க்கு ஒரு கவ்பாய் தொப்பி போன்று இருப்பதாக பலர் நினைப்பார்கள். உண்மையில் ஒரு ஊசியின் கண்ணுக்குள் நூல் நுழையும் காட்சியை மிக ஸ்டைலாக உருவாக்கியிருப்பதே இந்த இலட்சினை. காரணம் இந்த நிறுவனம் துவக்க காலத்தில் தையல் இயந்திரங்களை தயாரித்து வந்ததை குறிப்பதற்காக உருவாக்கப்பட்டதாம். மேலும் இந்த இலட்சினையை ஒவ்வொறு பகுதியாக பிரித்து பார்த்தால் “TOYOTA” என்கிற பெயரின் எழுத்துக்கள் வருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


Next Story