Top
undefined
Begin typing your search above and press return to search.

புதிய பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னம் இடம் பெற்றது ஏன்? எதிர்கட்சிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்!

புதிய பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னம் இடம் பெற்றது ஏன்? எதிர்கட்சிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2019 6:43 AM GMT


தற்போது வழங்கப்பட்டு வரும் புதிய பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை அரசு பாஸ்போர்ட்களில் அச்சிட்டு வெளியிடலாமா? இது ஒரு அப்பட்டமான அரசியல் நடவடிக்கை என மக்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் இந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது.


இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட்களில் ஏன் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளித்துள்ளது.


அதில் “போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒன்றாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது என்றும், மேலும் தாமரை நமது தேசிய மலர் என்றும், ஏற்கனவே தேசிய பறவை, தேசிய விலங்கு என சுழற்சி அடிப்படையில் பாஸ்போர்டில் இடம்பெற்று வருகிறது. இப்போது அந்த அடிப்படையில் நமது தேசிய மலரான ‘தாமரை’ இடம் பெற்றுள்ளது” என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.


மேலும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் நாம் உருவாக்கவில்லை என்றும், பன்னாட்டு விமானப்போக்குவரத்து வழிகாட்டு நெறிகள் படி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Next Story