Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுவருடம் எப்படியிருக்கும்? வருங்காலம் எப்படி? சொல்பவர் ஜோதிடர் அல்ல…. மெர்சிடீஸ் கார் நிறுவனத்தின் ஓனர்!!

புதுவருடம் எப்படியிருக்கும்? வருங்காலம் எப்படி? சொல்பவர் ஜோதிடர் அல்ல…. மெர்சிடீஸ் கார் நிறுவனத்தின் ஓனர்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 4:10 AM GMT


நம் வருங்காலம் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் பெரும்பாலும் நம்
அனைவருக்கும் அதிகமாகவே இருக்கும். ஜோசியம், ஜாதகம் எல்லாம் வெற்றிகரமாக இயங்க நான் கண்டிராத உலகை தெரிந்து கொள்கிற
ஆர்வம் கூட ஒரு வகையில் காரணம் எனலாம். நாம் வாழப்போகும் சொற்ப ஆண்டுகளில் நம்
முன் முகமூடி அணிந்து நிற்கிற காலம் எப்படியிருக்கும் என்கிற சுவரஸ்ய கருத்தை வெற்றியின் உச்சத்தை தொட்ட ஒரு மனிதர் ஆருடம்
சொன்னால்…?


சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக
இயக்குனர் திரு. டெய்ம்லர் பென்ஸ் வருங்காலம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள்
சமீபத்திய இணைய வைரல்களில் ஒன்று.. அதனுடைய தமிழாக்கம் இங்கே…


“கார் நிறுவனங்கள்
இனி எங்களுக்கு போட்டியாளர்களாக இருக்க போவதில்லை டெஸ்லாவை கூகுள், ஆப்பிள், அமேசான், மற்றும் ‘எட் அல்”
போன்றவைகளை தவிர. 3 விஷயங்கள் தான்
மாறாமல் இருந்துள்ளன. ஒன்று மரணம், வரி மற்றும் மாற்றம்.


அடுத்த 5 – 10 ஆண்டுகளில்
பாரம்பரிய நிறுவனங்கள் அனைத்தையும் மென்பொருள் அசைத்து பார்க்கும்.


உபேர்(UBER) என்பது வெறும்
மென்பொருள் கருவி, அதனிடம் சொந்தமாக
எந்த கார்களும் இல்லை. ஆனால் இன்று அது உலகின் மிக பெரிய டாக்ஸி நிறுவனம்.


ஏர் பி.என்.பி(Airbnb)
என்பது உலகின்
மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனம், ஆனால் அவர்களிடம் சொந்த சொத்துக்கள் என எதுவும் கிடையாது.


செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) நம்மை ஆள துவங்கி விட்டது. உலகை புரிந்து
கொள்வதில் கணினிகளின் பங்கு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட
பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘கணினி’ தன் வல்லமையால் உலகின் சிறந்த
ஆட்டக்காரர்களையெல்லாம் வீழ்த்தத்துவங்கிவிட்டது.


தற்சமயம் அமெரிக்காவில் இளம் வழக்கறிஞர்களுக்கு வேலையே கிடைப்பதில்லை.
காரணம் ஐபிம் வாட்சன்(IBM
Watson), இதன் மூலமாக சில நொடிப்பொழுதில் நீங்கள் சட்ட அலோசனைகளை (அதிகபட்ச அல்லது
அடிப்படை தகவல்களை பெறலாம்) மனிதர்கள் செய்யும் 90% துல்லியத்துடன் ஒப்பிடுகையில் 70%துல்லியத்தை
நீங்கள் பெறலாம்.


எனவே நீங்கள் சட்டம் படிக்கிறீர்களெனில் அதை உடனே நிறுத்துங்கள்.
வருங்காலத்தில் 90% வழக்கறிஞர்கள்
குறைந்திருப்பார்கள். நிபுணர்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பார்கள்.


புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தும் பணியில் செவிலியர்களாக செயலாற்றிவருகிறது
இந்த வாட்சன். மனித செவிலியர்களை விட இது நான்கு மடங்கு அதிக துல்லியத்துடன்
செயல்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் தற்போது ‘pattern recognition’ என்கிற மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்
இது முகங்களை அடையாளம் காண்பதில் மனிதர்களை விட சிறப்பாக செயல்படுகிறது.


தானியங்கி கார்கள்:


2018 ஆண்டு துவங்கி
உலகின் முதல் தானியங்கி கார்கள் பொதுமக்கள் மத்தியில் இயங்கும். 2020 ஆம் ஆண்டு முதல்
மொத்த கார் நிறுவனமும் ஆட்டம் காண ஆரம்பிக்கும். நீங்கள் இனி சொந்தமாக கார் வாங்க
வேண்டிய தேவையேயில்லை. நீங்கள் காரை உங்கள் தொலைபேசி மூலமாக அழைப்பீர்கள். அது
உங்கள் இடத்திற்க்கு வந்து சேரும். நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்க்கு
உங்களை அழைத்தும் செல்லும். அதை பார்க் செய்யவேண்டிய கவலையும் உங்களுக்கும்
வேண்டாம். வெறும் பயணித்த தூரத்திற்க்கான தொகையை மட்டும் நீங்கள் வழங்கினால்
போதும். நம் வருங்கால குழந்தைகளுக்கு இனி ஓட்டுனர் உரிமம் தேவைப்படாது அவர்கள்
சொந்தமாக காரும் வைத்திருக்க மாட்டார்கள்.


இது நகரின் தோற்றத்தையே மாற்றும் காரணம் இப்போது இருப்பதை காட்டிலும் 90-95% குறைவான கார்களே
இருக்கும். நாம் கார்களை நிறுத்தும் பார்க்கிங் இடத்தை அழகிய பூங்காக்களாக
மாற்றிவிடலாம். 1.2 மில்லியன் மக்கள்
கார் விபத்தில் உலகெங்கிலும் மரணிக்கிறார்கள். தற்சமயம் 60,000 மைல்களுக்கு ஒரு
விபத்தை நாம் சந்தித்து வருகிறோம். இது தானியங்கி கார்களின் மூலம் 6 மில்லியன்
மைல்களுக்கு ஓர் விபத்தென குறையும். இதனால் மில்லியன் கணக்கான உயிர்களை
வருடந்தோரும் நாம் காக்கலாம்.


பெரும்பாலான கார் நிறுவனங்கள் கடனில் மூழ்கும். பாரம்பரியம் மிக்க கார்
நிறுவனங்கள் இந்த பரிணாம வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேலும் சிறப்பான கார்களை
உருவாக்கும் முயற்சியில் இறங்கலாம். அதே சமயம் தொழில்நுட்ப நிறுவனங்கள் (டெஸ்லா, ஆப்பிள், கூகுள்)
புரட்சிகரமான அணுகுமுறையால் கார் சக்கரங்களின் மீது கணினியை சுழலசெய்து
விடுவார்கள்.


பெரும்பாலும் நிறுவனத்தை சேர்ந்த பெரும்பாலான
பொறியாளர்கள் டெஸ்லாவை கண்டு கலக்கத்தில் உள்ளனர்.


காப்பீட்டு நிறுவனங்கள் விபத்துகள் நேராததால் பெரும் சவாலை
வருங்காலத்தில் சந்திக்க நேரிடும். குறைவான விபத்துக்களால் காப்பீடு 100% மலிவாக்கப்படும்.
கார் இன்ஸ்யூரன்ஸ் என்கிற கருத்துருவாக்கமே இல்லாமல் போகும்.


ரியல் எஸ்டேட் தொழில் பெரியளவில் மாறும். நீங்கள் பயணிக்கும் பொழுதே
உங்களால் வேலை செய்ய இயன்றால் மக்கள் இன்னும் அழகான இடம் தேடி
வாழத்துவங்குவார்கள்.


எலக்ட்ரிக் கார்கள் 2020 இல் முக்கிய பங்கு வகிக்கும். நகரத்தின் இரைச்சல் குறைந்திருக்கும்
காரணம் அனைத்து புதிய கார்களும் மின்சாரத்தால் இயங்கி துவங்கியிருக்கும்.
மின்சாரம் நினைத்து பார்க்க முடியாத அளவு சுத்தமானதாகவும் மலிவானதாகவும்
இருக்கும். சோலார் உற்பத்தி அதிவேகமான ஏறுமுகத்தில் அடுத்த 30 ஆண்டுகளில்
இருக்கும். சோலர் உற்பத்தியால் அரும்பும் தாக்கத்தை நீங்கள் இப்போதே உணர முடியும்.


கடந்த ஆண்டு, உலகளவில் Fossil ஐ காட்டிலும்
சோலார் ஆற்றல் அதிகளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி நிறுவனங்கள்
மிகத்தீவிரமாக வீடுகளில் சோலார் ஆற்றல் நிர்மாணிக்கப்படுவதை கட்டுப்படுத்த
முயல்கின்றன. ஆனால் அது முடியாது. அந்த தந்திரத்தை மிக லாவகமாக தொழில்நுட்பம்
எதிர்கொள்ளும்.


மலிவான மின்சாரத்தின் மூலம் மலிவான மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீர்
கிடைக்கும். உப்பு தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய கன மீட்டர் ஒன்றுக்கு 2kWh (@ 0.25 சென்ட்)
தேவை. நம்மிடம் தண்ணீர் பற்றாகுறை இல்லை. குடிதண்ணீர் பற்றாகுறை தான்
உள்ளது. கற்பனை செய்து பாருங்கள் யார் வேண்டுமானலும் தனக்கு தேவையான அளவு
குடிதண்ணீரை எந்த கட்டணமுமின்றி பெற முடியும் என்பதை.


ஆரோக்கியம்:


ட்ரைகார்டர் X (Tricorder X ) இன் விலை இந்த
ஆண்டு அறிவிக்கப்படும். நிறுவனங்கள் சில மருத்துவ சாதனங்களை உருவாக்கும் (அந்த
வகையில் ஸ்டார்டெக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது தான் ட்ரைகார்டர்) இது உங்கள்
அலைபேசியுடன் இணைந்து செயலாற்றும். இது உங்கள் விழித்திரையை ஸ்கேன் செய்யும், உங்கள் இரத்த
மாதிரியை சேகரிக்கும். உங்கள் மூச்சு காற்றை அதனுள் செலுத்த முடியும்.


இது 54 நோய் தாக்கங்களை
ஆராய்கிறது, கிட்டதட்ட எந்த
நோயையும் இது கண்டறிந்துவிடும். எனவே இந்த பிரபஞ்சத்தின் மீது வாழும் அனைவரும்
இன்னும் சில வருடங்கலில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ ஆய்வுகள் மிக மலிவு விலையில்
சாத்தியமாகும். மருத்துவ நடைமுறைகளுக்கு விரைவில் விடைபெறும்.


3 D பிரிண்டிங்:


வெறும் 10 ஆண்டுகளில் 3 D பிரிண்டர்களின்
விலை 18,000 டாலரில் இருந்து 400 டாலர்களாக
குறைந்துள்ளது. அதே சமயத்தில் அதன் வேகம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து முன்னனி ஷூ நிறுவனங்களும் 3 D பிரிண்டிங் ஷூக்களை
தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.


ஏரோப்ளேனின் சில உதிரி பாகங்கள் 3 Dயில் பதியத்துவங்கியுள்ளன. விண்வெளி நிலையங்களில் இருக்கும சமீபத்திய
பிரிண்டர்கள் கடந்த காலத்தில் இருந்த பெரும்பாலான உதிரி பாகங்களை
தவிர்க்கத்துவங்கியுள்ளன.


இந்த ஆண்டின் இறுதியில் புதிய ஸ்மார்ட் போன்கள் 3 D ஸ்கேனிங் வசதியுடன்
வெளிவருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலமாக உங்கள் பாதங்களை 3 Dஸ்கேன் செய்து
உங்கள் ஷூக்களை நீங்களே உங்கள் இல்லத்தில் 3 D பிரிண்ட் செய்து கொள்ளலாம்.


சீனாவில் 6 மாடி கட்டிடத்தை 3 D பிரிண்ட் செய்து
ஏற்கனவே கட்டி முடித்துவிட்டார்கள். 2027இல் உருவாக்கப்படும் அனைத்திலிருந்து 10% உற்பத்தி 3 Dப்ரிண்ட் செய்ததாகவே இருக்கும்.


வர்த்தக வாய்ப்புகள்:


நீங்கள் எந்தொவொரு விஷயத்தை செய்ய விரும்புகிறீர்களோ.. அதற்கு முன்
உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள் “வருங்காலத்தில் நாம் இதை
வைத்திருப்போமா/உபயோகப்படுத்துவோமா? ஆம் எனில் அதை இன்னும் எத்தனை வேகமாக செய்து முடிக்க முடியும்?


உங்கள் யோசனை உங்கள் அலைபேசியுடன் இணைந்து செயலாற்றுவதாக இருக்க வேண்டும்
இல்லையெனில் அந்த யோசனையையே மறந்து விடுங்கள். 20 ஆம் நூற்றாண்டில் வெற்றிக்காக வடிவமைக்கப்பட்ட
யோசனைகள் அனைத்தும் 21 ஆம் நூற்றாண்டில்
சரிவையே சந்தித்துள்ளன.


தொழில்:


70%-80% வரையிலான தொழில்கள்
வருங்காலத்தில் காணமல் போகும். அதேவேளையில் அதிக அளவிலான புதிய தொழில் வாய்ப்புகள்
இருக்கும். ஆனால் இந்த குறுகிய காலத்தில் போதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுமா என்பது
குறித்து தெளிவான பார்வையில்லை.


விவசாயம்:


வருங்காலத்தில் 100% ரோபோட் விவசாய
ரோபோட்கள் இருக்கும். அப்போது விவசாயிகள் எல்லாம் மேலாளர்கள் ஆகிவிடலாம்… எல்லா
நாளும் களத்தில் இறங்கி வேலை செய்வதை காட்டிலும் அவைகளை நிர்வகிக்கலாம்.


Aeroponics இதற்கு குறைந்த அளவிலான நீரே தேவைப்படும்.
தற்சமயம் 30% விவசாய இடம்
பசுக்களுக்கு தேவைப்படுகின்றது. கற்பனை செய்து பாருங்கள் இனி அந்த இடம் அதற்கு
தேவையில்லை என்று. புதிய புதிய நிறுவனங்கள் பூச்சி புரதத்தை சந்தையில் விற்பனைக்கு
கொண்டு வருவார்கள். இது இரைச்சியில் இருக்கும் புரதத்தை விட அதிகம். அதற்கு
“புரதத்திற்க்கான மாற்று” என பெயரும் வைப்பார்கள் (காரணம் இன்றளவும் மக்கள் பூச்சிகளை
உண்பதை தவிர்க்கிறார்கள்)


“மூடிஸ்”( "moodies" ) என்றொரு செயலி
உண்டு. இது நீங்கள் எந்த மூடில் இருக்கிறீர்கள் என்பதை இப்போதே கணித்து சொல்லும். 2020 இல் உங்கள்
முகபாவங்களை கணித்து சொல்லும் பல செயலிகள் உருவாகலாம். நீங்கல் பொய் சொன்னால்
உங்களை காட்டி கொடுக்கலாம். நினைத்து பாருங்கள் ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில்
இந்த செயலியின் மூலம் அவர்கள் உண்மையை சொல்கிறார்களா அல்லது பொய்யை சொல்கிறார்களா
என்பது அப்பட்டமாக ஒளிப்பரப்பட்டால்…?


பிட்காயின்(Bitcoin)
ஒட்டுமொத்த உலகின்
நாணயமாக கருதப்படலாம்..!!


ஆயுட்காலம்:


இப்போது சராசரி ஆயுட்காலம் ஆண்டுக்கு 3 மாதங்கள் அதிகரிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு
முன்னர் 79 ஆண்டுகள் இருந்த
ஆயுட்காலம் இப்போது 80 ஆண்டுகளாக
அதிகரித்துள்ளது. மற்றும் 2036க்குள் இது வருடத்திற்க்கு
ஒரு வருடமாக அதிகரிக்கும். எனவே நாம் அனைவரும் நீண்ட காலம் வாழலாம் அநேகமாக 100வயதிற்க்கும் மேல்
வாழலாம்.


கல்வி:


மிகவும் மலிவாக 10 டாலருக்கான
ஸ்மார்ட் போன்களின் வருத்து தற்போது ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ளது. 2020இல் 70% உலக மக்கள்
ஸ்மார்ட் போன் வைத்திருப்பர்கள். இதன் பொருள் உலகின் அனைவருக்கும் உலகதரம் வாய்ந்த
கல்விக்கான சாத்தியக்கூறுண்டு.


ஓர் குழந்தை பள்ளியில் சென்று பயில வேண்டிய அனைத்தையும், அனைத்து
குழந்தைகளும் “கான் ஆகாதமி” (Khan academy )யில் கற்கலாம். இந்த மென்பொருள் ஏற்கனவே இந்தோனேஷியாவில்
வெளியிடப்பட்டுள்ளது இது விரைவில் அரேபிக், சுஹெலி மற்றும் சைனீஸ் மொழியில் வெளியிடப்படும். இந்த ஆங்கில செயலி
ஆப்ரிக்க மற்றும் உலகெங்கிலும் கொண்டு சேர்ப்பதன் மூலம் சரளமான ஆங்கிலம்
அனைவருக்கும் வசப்படும் இது இன்னும் அரையாண்டில் சாத்தியப்படும்.”


Next Story