Top
undefined
Begin typing your search above and press return to search.

"மோடி பேசுவது எங்களுக்கு புரியுதோ இல்லையோ, அவர் இந்தியனுக்கு எதிராக எந்த கெட்ட விஷத்தையும் செய்யமாட்டார்" - வைரலானது நெல்லை தமிழரின் நெகிழ்ச்சி வீடியோ!

மோடி பேசுவது எங்களுக்கு புரியுதோ இல்லையோ, அவர் இந்தியனுக்கு எதிராக எந்த கெட்ட விஷத்தையும் செய்யமாட்டார் - வைரலானது நெல்லை தமிழரின் நெகிழ்ச்சி வீடியோ!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 10:27 AM GMT



திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சாமானியர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பாகியுள்ளது. கர்மவீரர் காமராஜருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-






காமராஜர் வடமாநிலத்தில் ஒரு விவசாய சங்க மாநாட்டில் கலந்து கொள்ள போயிருக்கிறார். அங்கே உள்ளவர்களுக்கு தமிழ் தெரியாது. காமராஜருக்கு இந்தி தெரியாது. இதனால் காமராஜர் தமிழிலேயே பேசியுள்ளார். விவசாயிகள் அனைவரும் கைதட்டி வரவேற்றுள்ளனர்.
ஒரு நிருபர் அவர்களிடம் கேட்டுள்ளார், அவர் தமிழில் பேசியுள்ளார். உனக்கு தமிழ் தெரியாது. அப்படி இருக்கும்போது அவரது பேச்சுக்கு நீங்கள் ஏன் கை தட்டுனீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வட நாட்டு மக்கள் சொல்லி இருக்கிறார்கள், வந்து இருக்கிறவர் எங்கள் ஆள். அதாவது விவசாயி. அவர் எந்த மொழியில் பேசினாலும், விவசாயிகளுக்கு நல்லதாகதான் போயிருப்பார் எங்களுக்கு எதிராக அவர் எதுவும் பேசியிருக்க மாட்டார். ஆகவேதான் நாங்கள் அவரது பேச்சுக்கு கை தட்டினோம், என்று சொல்லியுள்ளார்கள்.


அதேபோலத்தான் பிரதமர் மோடியும். மோடி எதை செய்தாலும் இந்தியனுக்கு எதிராக ஒரு கெட்ட விஷயமும் செய்யமாட்டார். எனவே மோடி பேசுவது எங்களுக்கு புரியுதோ இல்லையோ, அவர் இந்தியனுக்கு எதிராக ஒருபோதும் எந்த கெட்ட விஷயங்களையும் செய்யமாட்டார். ஏனென்றால் தாய்நாட்டின் மீது நல்ல பற்றுடைய ஒரு நல்ல தலைவனை, இந்தியா இப்போதுதான் பெற்றிருக்கிறது


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


Next Story