Top
undefined
Begin typing your search above and press return to search.

"இதைப்பார்த்து உடன்பிறப்புகள் தூக்கில் தொங்கினால்.." - இப்படி ஒரு வீடியோ வைரலாக வலம் வருகிறது!

"இதைப்பார்த்து உடன்பிறப்புகள் தூக்கில் தொங்கினால்.." - இப்படி ஒரு வீடியோ வைரலாக வலம் வருகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 10:31 AM GMT



துக்ளக் ஆண்டு விழாவில் பழ.கருப்பையா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. "இதைப் பார்த்து திமுக உடன்பிறப்புகள் தற்கொலை செய்துகொண்டு செத்தால் நான் பொறுப்பல்ல" என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


அந்த வீடியோவில் பழ.கருப்பையா பேசி இருப்பதாவது:-





காந்தி நாட்டிலுள்ள இளைஞர்களை எல்லாம் பொதுவாழ்க்கைக்கு வாருங்கள் என்று அழைத்தார். நாட்டிலுள்ள யோக்கியன் எல்லாம் இந்தக் கிழவன் நம்மைத்தான் அழைக்கிறார் என்று சொல்லி பொதுவாழ்க்கைக்கு வந்தார்கள். நாட்டிலுள்ள அயோக்கியன் எல்லாம் இந்த கிழவன் அழைப்பது நம்மை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.


இன்றைக்கு கருணாநிதி போன்ற தலைவர்கள், இளைஞர்களை பொதுவாழ்க்கைக்கு வாருங்கள் என்று அழைக்கிறார்கள். நாட்டிலுள்ள அயோக்கியர்கள் எல்லாம் தலைவர் நம்மைத்தான் அழைக்கிறார் என்று உள்ளே வந்துவிட்டார்கள்.


எல்லாத் தீமைகளுக்கும் காரணம் அழைப்பவனைப் பொறுத்து பின்பற்றுபவர்களின் தகுதி இருக்கிறது. காந்தி அழைத்தபோது தேவர் சமூகத்திலிருந்து முத்துராமலிங்கத்தேவர் வந்தார். நாடார் சமூகத்தில் இருந்து காமராஜர் வந்தார். பிராமண சமூகத்திலிருந்து ராஜாஜி வந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கக்கன் வந்தார். ரெட்டியார் சமூகத்திலிருந்து ஓ.பி. ராமசாமி ரெட்டியார் வந்தார். ராஜூக்கள் சமூகத்திலிருந்து குமாரசாமி ராஜா வந்தார்.
இப்படி காந்தி அழைத்தபோது ஒவ்வொரு சமூகமும் தங்களிடம் உள்ள மிக உத்தமமான, மிகச் சிறந்த மனிதர்களை பொதுவாழ்க்கைக்கு அளித்தது.


இன்றைக்கும் அதே சமூகங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் தங்களின் பங்கிற்கு மந்திரிசபைக்கு அனுப்புகின்றன. அந்த மந்திரி சபையில் ஒரு யோக்கியன்கூட இல்லை.


அன்றைக்கும் எல்லா சமூகத்திலும் நல்லவர்களும், யோக்கியமான உத்தமர்கள் இருந்தார்கள். இன்றைக்கும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்கு காரணம், காந்தி காலத்தில் அயோக்கியர்கள் எல்லாம் வெளியே தெரியவில்லை. கருணாநிதி காலத்தில் யோக்கியன் எல்லாம் வெளியே தெரியவில்லை.


இவ்வாறு பழ.கருப்பையா பேசியுள்ளார்.


Next Story