Top
undefined
Begin typing your search above and press return to search.

புத்துணர்வு பெற புறப்பட்டன தமிழக கோவில் யானைகள்! கோவை தேக்கம்பட்டி வனத்தில் 48 நாட்கள் உற்சாக முகாம்!

புத்துணர்வு பெற புறப்பட்டன தமிழக கோவில் யானைகள்! கோவை தேக்கம்பட்டி வனத்தில் 48 நாட்கள் உற்சாக முகாம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 10:57 AM GMT



தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் கிட்டத்தட்ட 35 யானைகள் உள்ளன. இந்த யானைகளின் உடல்நலம், மன நலம், ஓய்வு மற்றும் அவற்றின் இனச்சேர்க்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாமுக்கு யானைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட யானைகளுக்கான இந்த சிறப்பு முகாம் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த முகாமிற்கு யானைகள் கொண்டுவரும்போதே அதனுடன் அந்த யானையின் பாகனும், அதற்கு சிகிச்சையளிக்கும் கால்நடை மருத்துவரும் உடன் வருகிறார்கள். இவர்கள் அங்கு வரும் சிறப்பு மூத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் யானைகளுக்கு நடைபயிற்சி, குளியல், சமச்சீர் உணவு ஆகியவை அளிக்கப்படுகிறது.


48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் பங்பேற்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் யானை தெய்வானை, திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் யானை கஸ்தூரி, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள், திருக்கடையூர் கோவில் யானை அபிராமி, உப்பிலியப்பன் கோவில் யானை பூமா ஆகியவை ஒரு பாகன், கால்நடை மருத்துவர் உட்பட 3 பேர் கொண்ட குழுவினருடன் வந்துள்ளன.
முன்னதாக யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பிறகே லாரியில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டன. 



சென்ற 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முகாமில் 33 யானைகள் பங்கேற்றதாகவும், ஆனால் சென்ற ஆண்டு 27 யானைகள் மட்டுமே பங்கேற்றதாகவும், இந்த ஆண்டு எத்தனை யானைகள் பங்கேற்கும் என இனிமேல்தான் தெரிய வரும் என கூறப்படுகிறது. 


Next Story