Kathir News
Begin typing your search above and press return to search.

இல்லம் இன்பமாக மாற சில வாஸ்து குறிப்புகள்.!

இல்லம் இன்பமாக மாற சில வாஸ்து குறிப்புகள்.!

இல்லம் இன்பமாக மாற சில வாஸ்து குறிப்புகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2019 4:01 AM GMT


வீடு என்பது
நாம் அனைவரின் மற்றொரு கருவறை போல. பெரும்பாலானோர்கள் எங்கிருந்தாலும் , உலகின் எந்த
மூலையில் இருந்தாலும் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நினைப்பார்கள். அமைதி,
ஆனந்தம், சந்தோசம், அன்பு என அனைத்தும் நிறைந்த இடமாக இருப்பது வீடு.


சில வேளைகளி
அந்த இல்லத்தில் எதிர்மறை அதிர்வுகள் நிரம்பியிருக்கும். நாம் எத்தனை சிரத்தை எடுத்து
அதனை தீர்க்க முற்பட்டாலும் அந்த எதிர்மறை எண்ணங்கள் நம் இல்லத்தை விட்டு அகலாது.


நம் இந்து
மரபுகளில் நல்ல அதிர்வுகளை நம் கர்மாவும், நாம் செய்யும் தர்மங்களும் ஈர்ப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் கூட சில நெருக்கடியான சூழலில் நம் எதிர்மறை அதிர்வுகளை நீக்குவதற்கு நம் பாரம்பரிய
ஞானம் தேவைப்படுகிறது.


நம் பண்டைய
காலத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் நம் முன்னோர்களிடம் தீர்வு இருந்தது. அனைத்து
தீர்வுகளையும் வேதத்தில் எழுதியிருந்தனர். ஆனால் இன்றைய துரித வாழ்வில் நாம் அதை புரிந்து
கொள்ள தவறிவிடுகிறோம்.


அதில் முக்கியமான
ஒன்று வாஸ்து சாஸ்திரம். இது கட்டிடக்கலை மையப்படுத்தியது. கட்டிட வடிவமைப்பு, பூமி
பூஜை துவங்கி இட மேலாண்மை செய்து ஒரு கட்டித்திற்கு வாழும் அல்லது தொழில் ரீதியான இடமாக
உருமாற்றுவது வரை அனைத்து அசைவுகளிலும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது.


ஒருவேளை நீங்கள்
கட்டிய இல்லத்தை வாங்குகிற போதோ அல்லது பூர்வீக இல்லத்தில் வாழ்கிற போதோ, நம்மை அறியாமலேயே
வாஸ்து தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அது குடும்பத்தில் இருப்பவர்களின்
உடல் நிலையை, பொருளாதார நிலையை பாதிக்க கூடும். எனவே நல்வாழ்விற்கான பொதுவான வாஸ்து
குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


வீட்டின்
முகப்பு கதவு கிழக்கோ அல்லது வடக்கோ நோக்கி இருக்குமாயின் அது வீட்டிற்கு நன்மை பயக்கும்.
ஒருவேளை கதவு இந்த திசையில் இருக்க தவறினால், முகப்பு கதவில் தங்க முலாமிலோ அல்லது
வெள்ளி முலாமிலோ அல்லது செம்பிலோ ஸ்வஸ்திக் குறியீடு வைக்கலாம் என பரிந்துரைக்கிறது
வாஸ்து சாஸ்திரம்


வீட்டின்
கழிவு தொட்டி வட-கிழக்கு அல்லது கிழக்கில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்


வீட்டின்
கழிவறையும், பூஜையறையும் அருகருகே இல்லாது வாரு பார்த்து கொள்ளுதல் நலம்.


நம் இல்லங்களில்
வீட்டின் குப்பை தொட்டியை வீட்டிற்கு நேரெதிர் வைப்பது ஒரு வழக்கம், அது சுகாதார ஊழியர்கள்
தினசரி எடுத்து செல்ல வசதியாக இருக்கும் என்பதால். ஆனால் எப்போதும் குப்பை தொட்டி வீட்டின்
முகப்பு கதவிற்கு நேரெதிரே இல்லாது வாறு பார்த்து கொள்ள வேண்டும்.
ஒரு வீட்டை புணரமைக்கிற போதோ அல்லது புது இல்லத்தை கட்டமைக்கிற
போதோ ஒரு போதும் பழைய பொருட்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்தாதீர்கள். அது வாஸ்து தோஷத்தை
உருவாக்கும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News