Top
undefined
Begin typing your search above and press return to search.

சிலுவையில் கட்டி 10 நாட்கள் தொங்கவிடப்பட்டார்! - வீர சாவர்க்கர் அனுபவித்த நெஞ்சை பதற வைக்கும் கொடூர சித்ரவதைகள்!

சிலுவையில் கட்டி 10 நாட்கள் தொங்கவிடப்பட்டார்! - வீர சாவர்க்கர் அனுபவித்த நெஞ்சை பதற வைக்கும் கொடூர சித்ரவதைகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2019 5:25 AM GMT


யார் இந்த வீர் சாவர்க்கர்?
என்ற கேள்விக்கு, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்களுக்கு பதில் தெரிவதில்லை. அந்த அளவிற்கு வரலாறு தவறாக எழுதப்பட்டு உள்ளது.


இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்து, அவர் மீது அவமதிப்பை ஏற்படுத்தியது மன்னிக்க முடியாத தவறு.
இதற்கு வரலாற்றை தங்களின் இஸ்டத்திற்கு எழுதி மக்களை ஏமாற்றிய காங்கிரசே காரணம்.


சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குள் முடமாக்கிய காங்கிரசின் பித்தலாட்ட பாடத் திட்டமே இதற்குக் காரணம்.


பிரிட்டிஷ் அரசின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். பிறவிப் போராளி. பயம் என்ற வார்த்தையை அறியாதவர்.


பிரிட்டிஷ் அரசு அவருக்கு 31 ஜனவரி, 1911-ஆம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.


பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு நபருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது சாவர்க்கருக்கு மட்டுமே. மற்றவர்கள் துவண்டபோது தைரியமாக எதிர்கொண்டார் சாவர்க்கர். அவரின் மன உறுதிக்கு ஒரு சான்றுதான் இந்த நிகழ்வு.


சிறையில் சாவர்க்கரின் கழுத்தில் ஒரு இரும்புத் தகடு மாட்டப்பட்டது. அதில் கைதிகள் விடுதலையாகும் வருடம் எழுதப்பட்டிருக்கும். அதில் ‘1960' என்று எழுதப்பட்டிருந்தது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் அதைச் சுமக்க வேண்டும். உடன் இருந்தவர்கள் கண்கலங்கி நின்றார்கள்.


அப்போது பிரிட்டிஷ் சிறை அதிகாரி அங்கு வந்தான். சாவர்க்கரைப் பார்த்து கிண்டலாக பேசினான்.


“சாவர்க்கர், நீங்கள் பயப்படத் தேவையில்லை. காருண்யமிக்க பிரிட்டிஷ் அரசு உங்களை 1960-இல் வெளியே விட்டுவிடுவார்கள். அதாவது 50 ஆண்டுகள் கழித்து” என்றான் கிண்டலாக.


“பிரிட்டிஷ் அரசைவிட காருண்யம் மிக்கது சாவு. அது அதற்கு முன்பே என்னை வெளியே விட்டுவிடலாம் அல்லவா?” என்று சொல்லிவிட்டு சிரித்தார் சாவர்க்கர்.


பதில் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அந்த வெள்ளைக்கார அதிகாரி.


குழந்தைப் பருவம் முதல், உயிர் பிரியும் தருவாய் வரை போராடியவர் சாவர்க்கர். தன்னுடைய உழைப்பை பிறர் அபகரித்தபோதும், அதைக் கண்டு வருத்தப்படாதவர். சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததில் பெரும்பங்கு சாவர்க்கருக்கு உண்டு. ஆனால், பதவியையும், பெருமையையும் காங்கிரஸ் வளைத்துப் போட்டது.


அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிறையின் சரித்திரத்தில் எந்த ஒரு கைதிக்கும் அளிக்கப்படாடது. மனிதாபிமானமற்ற கொடுமைகள் அவை.


தொடர்ந்து 6 மாதங்கள் இருட்டு அறையில், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். 4 மாதங்கள் யாரும் பார்க்க முடியாதபடி சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். கைகளும், கால்களும் கட்டப்பட்டு தொடர்ந்து 7 நாட்கள் நிற்க வைக்கப்பட்டார்.
இதுபோல் இரண்டு முறை அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் 14 நாட்கள் அவர் இந்த தண்டனையை அனுபவித்தார்.


“கிராஸ் பார்” என்று சொல்லப்படும் சிலுவை பலகையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், தொடர்ந்து 10 நாட்கள் நிறுத்தப்பட்டார். ஏசுவை சிலுவையில் அறையப்பட்டது போன்ற தண்டனை.


கை, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு மாதங்கள், கனத்த இரும்பு சங்கிலியுடன் இருந்தார்.


இன்னும் செக்கிழுத்தது, அடிபட்டது, கையிறு திரிப்பது என்று அனுபவித்த தண்டனைகளின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகும்.


உலகத்தில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இது போன்ற கஷ்டங்கள் வரக்கூடாது.


சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ்கார்கள், தாங்கள்தான் சுதந்திரத்துக்குக் காரணம் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தனர்.


மனம் வெறுத்த சாவர்க்கர், 1961- ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.. அந்தக் கட்டுரையின் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-
காந்திஜியின் காங்கிரஸ்தான், ஆங்கிலேய ஆட்சியாளர்களிடமிருந்து, கத்தியின்றி, ரத்தமின்றி போராடி சுதந்திரத்தை அடைந்தது என்று குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகங்களில் பாடங்களை அரசாங்கம் வடிவமைத்துள்ளது.


ஆனால், உண்மையில் நம்முடைய புரட்சியாளர்களின் தூண்டுதலால் பலம் வாய்ந்த நம் சேனை வாளை உருவி, வீரத்துடன் போராடியது. ஆங்கிலேயர்களை வெட்டிக் குவித்தும், மற்றவர்களையும் போராட தூண்டியது. இதனால்தான், ஆங்கிலேயர்கள் பயந்து போய் சுதந்திரம் கொடுக்க, பேச்சுவார்த்தை துவங்கினர்.
இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த உண்மையை, பிரிட்டிஷ் பிரதம மந்திரியே பார்லிமென்ட்டில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.


இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவம் சிங்கப்பூரின் மீது குண்டுகளை போட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ராணுவமும் போரில் குதித்தது.


அந்தச் சமயத்தில் தளபதி ராஷ்பிஹாரி போஸின் ஆஜாத் ஹிந்த் படை, ஆங்கிலேயர்களுடன் போரிட்டது. சுதந்திரம் அடைவதற்காக 50,000 வீரர்கள் போரிட்டனர். அதில் 25,000 பேர் வீரமரணமடைந்தனர். மீதமிருந்தவர்களில் பெரும்பகுதியினர் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துவிட்டார்கள்.


இதை ஜே.ஜி. ஒஹஸாவா என்பவர் எழுதிய “தி டூ க்ரேட் இண்டியன் இன் ஜப்பான்” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். “இந்தியர்களின் வீரப்போர், ஆங்கிலேயர்களை நடுங்கவைத்தது” என்று அதில் தெரிவித்துள்ளார்.


பார்லிமெண்டில், பிரிட்டிஷ் அரசு “தி இண்டிபெண்டென்ஸ் ஆப் இந்தியா ஆக்ட்” சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன், பிரிட்டிஷ் அரசின் சாம்ராஜ்யவாதியான சர் வின்ஸ்டன் சர்ச்சில் வருத்தமடைந்தார்.


“இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழி இல்லையா? இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காமல் நம் பிடியிலேயே வைத்துக்கொள்ள முடியாதா?” என்று கேட்டார்.


“இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான காரணம், அங்குள்ள ராணுவம் இப்பொழுது வெறும் ரொட்டிக்காக ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. மேலும், பிரட்டனுக்கு தற்போதய நிலையில், இந்திய ராணுவத்தை அடக்கிவைக்கும் சக்தியும் இல்லை” என்று பதிலளித்தார் பிரதமர் கிளமென்ட் அட்லி.


அட்லியின் கருத்தையே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்தினர்.
ஆகையால், இந்தியாவின் சுதந்திரம் என்பது புரட்சிக்காரர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு சாவர்க்கர் அந்த கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
வீர சாவர்க்கரின் கருத்தில் உண்மை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.


இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், சுதந்திரம் கிடைத்தவுடன் பதவிக்கு வந்தனர். ஆனால், சாவர்க்கர் தனக்கு பதவி எதுவும் வேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.


இதுதொடர்பாக வீர சாவர்க்கர் கூறியிருப்பதாவது:-
தேசபக்திக்கு கைமாறாக பதவி, பட்டம், கோட்டா, பர்மிட் இவற்றையெல்லாம் பெறக்கூடாது. எனக்கு ஆட்சியில் எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆங்கிலேய அரசு ஆட்சியில் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட வீட்டைக்கூட திருப்பித் தரவில்லை. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.


எனக்கு எந்தவிதமான பட்டம், பதவியில் விருப்பமில்லை. மூன்று, நான்கு வருடங்களிலேயே சுதந்திரமடைந்த பாரதத்தை பார்த்துவிட்டோம். ஒரு காலத்தில் புரட்சிக் கருத்துகளை வழிபடுதல் பைத்தியக்காரத்தனம் என்று சொன்னர்கள்.


ஆனால், அந்தச் சயமத்தில் புரட்சிக்காரர்களாகிய நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டோம். எண்ணற்ற இளைஞர்கள் தூக்கில் தொங்கினர். அவர்களுக்கு எந்தப் பொருளின் மீதும் நாட்டமில்லை. அவர்கள்தான் உண்மையான சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
இவ்வாறு வீர சாவர்கள் கூறியுள்ளார்.


இப்படிப்பட்ட ஒரு மாவீரர் விர சாவர்க்கரைத்தான் இன்று காலையில் இத்தாலியில் பெய்த மழையில் முளைத்த கோரைப்புல் ராகுல் காந்தி, அவமதித்து பேசுகிறார்.
அவரது தாயார் சோனியாவின் வழியில் சொல்வதென்றால்...
“பிதாவே இவரை மன்னியுங்கள்! தான் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசிவிட்டார்!”


Next Story