Top
undefined
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி இனிமேல் "ராகுல் ஜின்னா" என்று அழைக்கப்படுவார்! - வறுத்தெடுத்த பா.ஜ.க!

ராகுல் காந்தி இனிமேல் ராகுல் ஜின்னா என்று அழைக்கப்படுவார்! - வறுத்தெடுத்த பா.ஜ.க!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2019 9:24 AM GMT



சமீபத்தில் ராகுல்காந்தி, "இந்தியாவில் கற்பழிக்க வாருங்கள்"என்று பேசி ஒட்டுமொத்த இந்திய பெண்களையும் இழிவுபடுத்தினார். இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு வலுத்தது. அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது


இந்த நிலையில் மீண்டும் திருவாய் மலர்ந்த ராகுல்காந்தி “எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று பேசியுள்ளார். இதன் மூலம் அவர் சுதந்திர போராட்ட வீரர், வீர சாவர்க்கரை அவமதித்துள்ளார்.


இது இந்த தேசத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து தரப்பில் இருந்தும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.


இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.எல். நரசிம்மராவ் கூறியதாவது:-


ராகுல்காந்திக்கு, யாரெல்லாம் இந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார்கள் என்பதும் தெரியாது, யாரெல்லாம் சுதந்திர காலத்தில் சுகமாக இருந்துவிட்டு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பதவியை அனுபவித்தார்கள் என்பதும் தெரியாது.


அவரது கருத்து முழுக்க முழுக்க, நாடு பிளவுபட காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் கருத்தோடு ஒத்துப் போகிறது. ராகுல் காந்தியின் அரசியல், மனோபாவம், செயல்பாடுகள் அனைத்தும் ஜின்னாவின் வழிவந்தவர் என்பதையே காட்டுகிறது. எனவே அவருக்கு ராகுல்காந்தி என்பது பொருத்தமான பெயரை அல்ல. அவருக்கு பொருத்தமான பெயர் "ராகுல் ஜின்னா" என்பதுதான்.


ராகுல் காந்தி, எந்த விதத்திலும் வீர சாவர்க்கரின் மரபு வந்தவர் அல்ல. வீர சாவர்க்கரின் பெயரை உச்சரிப்பதற்குகூட ராகுல்காந்தி போன்றவர்களுக்கு அருகதை கிடையாது.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story