Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Dec 2019 6:27 AM GMT


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது,இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 65ஆயிரத்து 659 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் இன்று அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.



வேட்பு மனு மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்களது மனுக்களை 19ஆம் தேதி திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,முதல்கட்ட வாக்குப்பதிவு வருகின்றோம் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ஆம் தேதியும் நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகளில் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியிடப்படும்.


Next Story