Top
undefined
Begin typing your search above and press return to search.

சிங்கமென சீறிய அமைச்சர் சி.வி.சண்முகம்; புறமுதுகிட்டு ஓடிய மு.க.ஸ்டாலின்!

சிங்கமென சீறிய அமைச்சர் சி.வி.சண்முகம்; புறமுதுகிட்டு ஓடிய மு.க.ஸ்டாலின்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Dec 2019 12:19 PM GMT


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் மரண அடி கொடுத்து உள்ளது” என்று கூறியிருந்தார்.


இதற்கு பதில் அளித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார்” என்று கிண்டலாக கூறினார்.


இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி.சண்முகம், மு.க.ஸ்டாலினை வறுத்து எடுத்து விட்டார். “ஒரே மேடையில் நேருக்கு நேர் பேச தைரியம் இருக்கிறதா?” என்று சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக சி.பி.சண்முகம் கூறியிருப்பதாவது:-


என்னை தனிப்பட்ட முறையில் “தள்ளாடுகிறேன், துள்ளாடுகிறேன்” என்று பேசுகிறார். யார் பேசுவது? வாய் குழறி, நாக்கு உளறி, நான்கு வார்த்தையை தெளிவாக பேச வக்கில்லாத, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நீ என்னைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.


இதற்கு மேலும் நீ பேசினாய் என்றால், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டும் என்றால், தைரியம் இருந்தால் வா, மேடை போடு, நீ பேசு. உன்னைப்பற்றி நான் பேசுகிறேன். உன்னைப் பற்றி நானும் பேசுவதற்குத் தயாராக இருக்கிறேன். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்தவன் நான் கிடையாது. இதையெல்லாம் பார்த்து முடித்து விட்டுதான், இந்த ஆட்சியிலே நாங்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறோம்.


மூன்றாம் தர பத்திரிகையான முரசொலி என்னைப் பற்றி எழுதுகிறது. ஊர் பெயர் தெரியாதவன் என்று. யார் ஊர் பேர் தெரியாதவன்? நான் இந்த தமிழகத்தினுடைய குடிமகன்.


நீ எங்கிருந்து வந்தாய்? உன்னுடைய தலைவர் எங்கிருந்து வந்தவர்? அவருடைய பூர்வீகம் என்ன, சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா?


ஆகவே நாவடக்கத்தோடு பேசுங்கள். நீங்கள் வகிக்கின்ற பதவிக்கு நாவடக்கத்தோடு பேச வேண்டும். இதற்கு மீறியும் நீங்கள் பேசினால், அதற்கு பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். உனக்கு தைரியம் இருந்தால், எனது பெயரை சொல்லி பேசு பார்க்கலாம். நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.




https://twitter.com/SuryahSG/status/1206620938759852032


இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விடுத்துள்ளார்.


இந்த சவாலை எதிர்கொள்வதற்கு திராணி இல்லாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எடுபிடிகள் மூலம் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே துணிச்சல் மிக்க தலைவர் என்றால், அமைச்சர் சி.வி.சண்முகத்தை மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் எதிர் கொள்ள வேண்டியதுதானே? ஏன் புறமுதுகிட்டு ஓட வேண்டும்? என்கின்றனர் தமிழர்கள்.


Next Story