Top
undefined
Begin typing your search above and press return to search.

“இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் வந்தால் நாங்கள் துரத்தியடிப்போம்” - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திட்டவட்டம்!

“இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் வந்தால் நாங்கள் துரத்தியடிப்போம்” - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திட்டவட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2019 12:48 PM GMT


நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், முஸ்லிம் பயங்கரவாதிகள், முஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் எதிர்த்து வருகின்றனர்.


அவர்கள், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்களுக்கும், இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து உள்ளனர்.


இதுதொடர்பாக போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டி விடும் வேலையை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கனகச்சிதமாக செய்து வருகின்றன.


இந்த நிலையில் இந்தியாவிலிருந்து முஸ்லிம் பாகிஸ்தானுக்கு அகதிகளாக வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம், துரத்தி அடிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஜெனிவாவில் நடந்த சர்வதேச அகதிகள் மன்றத்தில் பேசிய இம்ரான்கான் கூறியதாவது:-


இந்தியாவில் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, தேசிய குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது, ஆகியவற்றைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு வர விரும்புகின்றனர்.


அப்படி பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை எங்கள் நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்போம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்தியாவில் உள்ள இந்துக்களுடன் இணைந்து வாழ முடியாது என்று கூறி முஸ்லிம்கள், தனி நாடு கேட்டு போராடி, அதன் மூலம் இந்தியாவை பிளந்து பாகிஸ்தானை பிரித்து சென்றனர்.


பாகிஸ்தான் உதயமானபோது 1947-இல் 22 சதவீதம் இந்துக்கள் வசித்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இப்போது பாகிஸ்தானில் ஒரு சதவீத இந்துக்கள் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.


அதே நேரம் இந்தியாவில், நாடு பிரிவினை அடைந்த போது வெறும் 7 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை, தற்போது 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பல வகைகளில் சிறுபான்மையினர் என்ற போர்வையில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.


இருந்தாலும் இந்தியாவில் வசிக்கின்ற பல முஸ்லிம் தலைவர்களும், ஏராளமான மூளைசலவை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் இந்தியாவிற்கு எதிரான மன நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவைவிட பாகிஸ்தானைத்தான் அதிகமாக நேசிக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் பிரதமர், “இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கதவை இழுத்து மூடுகிறார்.


இதை உணர்ந்து இங்குள்ள பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம்கள், தங்களுடைய மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.


Next Story