Top
undefined
Begin typing your search above and press return to search.

Self disicipline – அப்படின்னா..? சவாலுக்கு நீங்க ரெடியா..? வாங்க ஒரு கை பார்க்கலாம்.!

Self disicipline – அப்படின்னா..? சவாலுக்கு நீங்க ரெடியா..? வாங்க ஒரு கை பார்க்கலாம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2019 2:15 AM GMT


இதை ஒரு வகையில்
சவால் என்று கூட சொல்லலாம். நம் சுய ஒழுக்கத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க
உதவும் சவால்.


.நண்பர்கள், உங்கள் வாழ்க்கை துணை, அல்லது உறவினர் என யாரையாவது உட்படுத்தி அவர்கள்
முன் இந்த சவாலை பொதுவாக செய்யுங்கள்


இந்த சவால்
எதற்காக.??


சுயஒழுக்கத்தை
நேர்கோட்டில் செலுத்த.


எல்லோர்
முன்னிலையிலும் இருக்கும் முகத்தை விடவும் நம்மை கண்காணிக்கவோ, கேள்வியெழுப்பவோ ஆளில்லாத வேளையில் நம்மிடம்
இருக்கும் முகமும் மனமுமே நிதர்சனமான உண்மை அந்த உண்மையே சுயஒழுக்கம். அந்த
தருணங்களில் நாம் சுயஒழுக்கத்துடன் இருக்கிறோமா..? நாம் நமக்காக செய்து கொள்ள வேண்டியவைகளை தவறாமல்
செய்கிறோமா..? பெரும்பாலும் இல்லை
என்பதே பதில்.


சுயஒழுக்கத்தில்
தோய்கின்ற பலர் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள்


நம் வேலையை தள்ளி
போடுதல். கொடுக்கப்பட்ட நேரத்திற்க்குள் அதை செய்து முடிக்காமல் அழுத்தங்களுக்கு
ஆட்படுதல், இதனால் பிடித்த
வேலைக்கூட பாரமானதாக நமக்கு தெரிகிறது இல்லையா?


உணவை மட்டும்
தவறாமல் உண்டுவிட்டு, உடற்பயிற்சிக்கு
செய்வதற்க்கு காரணம் தேடுவது. இதனால் நமக்கு கிடைக்கும் பிரதிபலன் ஆரோக்கிய கேடு
மட்டுமே


பொருளாதார
முடிவுகளை, திட்டங்களை
கிடப்பில் போடுவது. இது சூழலை மிகவும் சிக்கலானதாகவே மாற்றும்


உறவு சிக்கல்களை
சீராக்காமல் தள்ளி போடுவது. உறவுகளுக்குள் எழும் சர்ச்சை பேச்சுக்கும்
விவாதத்திற்க்கும் அஞ்சி அதை கையாளாமல் விடுவதால் ஏற்படும் விரிசல்களை சமாளிப்பது.


கவனச்சிதைவு,
செயலற்றத்தன்மை, குற்ற உணர்வு, உளைச்சல், தனிமை
என ஏராளமான இலவச இணைப்புகளை சுய ஒழுக்கத்தை தொலைப்பதால் பெறலாம்


இத்தனை பிரச்சனைகளை
பல நாட்கள் அனுபவிப்பதற்க்கு மாறாக ஒரு நாளில் சில நிமிடங்களை சீராக ஒதுக்கி நம்
அன்றாட பணிகளை, கடமைகளை, தேவைகளை தொடர்ந்து செய்வது எளிமையானது தானே?


சுய ஒழுக்க பணிகளை
தொடர்ந்து செய்வதற்க்கான சில குறிப்புகள்


எதற்காக
செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து செய்யுஙக்ள். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவா?
உங்கள் இலக்கை அடையவா…? உங்கள் கனவை மெருகேற்றவா..? ஆம் எனில் அப்போது இந்த செயலும் அவசியமாகிறாது.
இதை நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்ற உறுதி கொள்ளுங்கள்


உங்களை சுற்றி பல
நினைவூட்டலகளை தயார்படுத்தி வையுங்கள். சிறு குறிப்பை எழுதி உங்கள் கணினி அலமாரி
என உங்கள் பார்வைபடும் இடத்திலெல்லாம் ஒட்டுங்கள். உங்கள் நண்பர்களை,, கணவரை/மனைவியை, குழந்தைகளை சகாக்களை அழைத்து நினைவூட்ட
சொல்லுங்கள்


நேர்மறை எண்ணங்கள்
நிறைந்தவர்களுடன் சூழ்ந்திருங்கள். எப்போதும் அவர்களை உங்களை உற்சாகப்படுத்த
கேட்டு கொள்ளுங்கள்.


உங்கள் வேலையை
எளிமையானதாக வைத்துக்கொள்ளுங்கள். உதராணமாக நீங்கள் தினசரி தியானம் செய்ய
வேண்டுமா…? நீங்கள்
தியானத்தின் ஆழ்நிலைக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் இலக்கை நிர்ணயிக்காதீர்கள்.
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து யோகா விரிப்பின் மீது அமர்ந்தால்
போதும். மீதமுள்ள நிகழ்வுகள் இயற்கை நிகழ்த்தும். இது அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும்


நீங்கள் உங்களுடனே
நல்ல உறவை வளர்த்து கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள்
நம்பிக்கையை, உங்கள் சத்தியத்தை
நீங்கள் காப்பது உங்கள் மீது உங்களக்கே கர்வம் வளர்கிற தருணம். அந்த உற்சாகமான
தருணங்களை உறுதியான மனம் கொண்டு உருவாக்குங்கள்.


எதிர்பாரா
காரணங்கள் உங்கள் தினசரி நிகழ்வில் தடைகள் வந்தால் அதையே ஒரு காரணமாக உருவாக்கி
அந்த செயலை பாதியில் நிறுத்திவிடாதீர்கள். அது பாதையில் இருக்கும் வேகத்தடை
போன்றது என்பதை உணருங்கள். சில நிமிடம் நின்றாலும் தொடர்ந்து பயணிக்கும் வாகனங்கள்
போல ஒரு சில நாட்கள் தடைப்பட்டாலும் அதனால் ஏற்பட்ட மாற்றாங்களை கூர்ந்து கவனிந்து
கற்று தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்.


சுயஒழுக்க
ததும்பும் மனிதராக உங்களை செதுக்க இந்த சவாலை ஏற்றுத்தான் பாருங்களேன்.
எட்டாக்கனியா என்ன வெற்றி. எல்லாம் எட்டக்கூடிய தூரம் தான். !!


Next Story