Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது - டாக்டர் ராமதாஸ் காட்டம்!

தி.மு.க ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது - டாக்டர் ராமதாஸ் காட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2019 1:10 PM GMT


பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


கடந்த கூட்டத் தொடரில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவருக்கு இந்தியாவிற்கு  வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா நிறைவேறியது இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து சட்டம் அமலுக்கு வந்தது இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, இதை கண்டித்து  திராவிட முன்னேற்றக் கழகமும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது குடியுரிமை சட்டத்திற்கு பா.ம.கவும் அ.தி.மு.கவும் ஆதரவு தெரிவித்து ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார் இதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ம.க  நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலைக்கு துணை நின்றதோடு அதற்கு கூலியாக புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளை பெற்றுக் கொண்ட திமுக ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது என்று கூறியிருக்கிறார் திமுகவைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர் நலனுக்காக இதுவரையில் எதையும் செய்ததில்லை செய்யப் போவதுமில்லை என்று குற்றம் சாட்டி இருக்கும் ராமதாஸ் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கஜினி முகமது போல படையெடுக்கும் திமுக ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஈழத் தமிழ்கள் மீது அக்கறை கொண்டவர்களாக நடிப்பதாக விமர்சித்திருக்கிறார் திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் தன்னுடைய அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் திமுக, தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா? இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா? இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தில் 18 பேர் உயிர்த்தியாகம் செய்ததை திமுக அரசு கொச்சைப்படுத்தியதை மறக்க முடியுமா?  இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் துயரம் கூட மறையாத நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், டி.ஆர். பாலுவும் இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்று விருந்து உண்டதுடன், கொலைகாரனின் கைகளில் இருந்து பரிசுப்பெட்டிகளையும் வாங்கி வந்தார்களே.... அதை தமிழர்கள் மன்னிப்பார்களா?ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா? 


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story