Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கை தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமான காங்கிரஸ் – தி.மு.க, இன்று நாடகமாடுகின்றன” – வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!

இலங்கை தமிழ் மக்களின் அழிவிற்கு காரணமான காங்கிரஸ் – தி.மு.க, இன்று நாடகமாடுகின்றன” – வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Dec 2019 7:24 AM GMT


இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின்போது, ஈழ தமிழர்களை அழித்து ஒழிக்க காரணமான காங்கிரஸ், திமுக கட்சிகள், இன்று அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. அவர்களின் முகத்திரையை, பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கிழித்துள்ளார்.


இதுதொடர்பாக வானதி சீனிவாசன், தனது தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு இருப்பதாவது:-


இலங்கை தமிழ் மக்களின் அழிவிற்கும், வேதனைக்கும் காரணமான காங்கிரஸ், திமுக கட்சிகள் இன்று, அவர்களை பற்றி கவலைப்படுவதுபோல் நடிக்கிறார்கள். இலங்கையின் மக்கள் தொகையில் தமிழர்கள் எண்ணிக்கை குறைய குறைய அங்கு எடுக்கப்படும் அரசியல் முடிவுகளிலும் வாக்களிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறையும். இங்குள்ளவர்கள் இந்திய குடியுரிமை பெற்றால், அவர்கள் அங்கு வாக்களிக்க இயலாது.




https://twitter.com/VanathiBJP/status/1206985875516641280


மேற்கத்திய, ஐரோப்பாவின் சில நாடுகளில் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் சில வசதிகளும், உரிமைகளும் இந்திய குடியுரிமை பெற்றால் கிடைக்காது என்பதால் பெரும்பாலோர் இதை விரும்புவதில்லை.


இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது இலங்கையை சிங்கள மக்களுக்கு தாரை வார்க்கும் செயலாக மாறிவிடும்.


கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் புதிய வீடுகள், போக்குவரத்து மற்றும் தொழில் உதவி, இந்திய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கான உதவி மூலம் இருநாட்டு உறவில் மேம்பாடு என அவர்கள் தங்கள் சொந்த நாடு திரும்ப அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்.


இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story