Top
undefined
Begin typing your search above and press return to search.

எடப்பாடி ஆட்டம் ஆரம்பம்! தி.மு.க. வாபஸ்; அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

எடப்பாடி ஆட்டம் ஆரம்பம்! தி.மு.க. வாபஸ்; அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 12:55 PM GMT


கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் 19-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் முன்னாள் சேர்மன் ராஜலெட்சுமி ராஜேந்திரன், திமுக சார்பில் கலைவாணி சதீஷ் , சித்ரா முருகானந்தம் ஆகியோரும், ரம்யா ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.


 வேட்பு மனு  வாபஸ் பெற  இன்று பிற்பகல் மூன்று மணிவரை நேரம் ஒதுக்கபட்டு இருந்தது. இந்நிலையில்  19 வார்டு ஒன்றிய  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலைவாணி  சதிஸ், ரம்யா   முருகானந்தம்,  உள்ளிட்ட 4 பேரும்  வேட்பு  மனுவை வாபஸ் பெற்றனர். 





அதனால் அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த  கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வெ, கணேசன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் சாலைமறியல் செய்து தனது  அலப்பரையை நிகழ்த்தினர். 





19 வார்டு ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் சேர்மன் ராஜலெட்சுமி ராஜேந்திரனின் கணவர் ராஜேந்திரன் அதிமுக  நல்லூர் தெற்கு  ஒன்றிய செயலாளராக உள்ளார்.





முதல்வர் எடப்பாடியின் ஆட்டம் தொடங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்


Next Story