Kathir News
Begin typing your search above and press return to search.

சூடு, சொரணை உள்ள தி.மு.க உடன்பிறப்புகள், இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்!

சூடு, சொரணை உள்ள தி.மு.க உடன்பிறப்புகள், இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்!

சூடு, சொரணை உள்ள தி.மு.க உடன்பிறப்புகள், இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 5:53 AM GMT



கல்லூரி மாணவர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-


குடியுரிமை சட்டமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த சட்டமாக இருந்தாலும், அதனை பாகிஸ்தான் எதிர்த்தால் அந்த சட்டம் 60% நல்ல சட்டம் தான். அந்த சட்டத்தை காங்கிரசும் சேர்ந்து எடுத்தது என்றால், அது 80% நல்ல சட்டம்தான். திமுகவும் சேர்ந்து எதிர்த்தால், சந்தேகமே வேண்டாம் 100% அது நல்ல சட்டம்தான்.


நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஒண்ணு பாகிஸ்தான் நாட்டுக்காரன். இன்னொண்ணு இத்தாலி நாட்டுக்காரன். இன்னொருத்தன் எந்த நாட்டுக்காரன் என்றே தெரியவில்லை.


திமுகவுக்கு ஈழத்தமிழர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்றே தெரியவில்லை. ஈழத் தமிழர்கள் படுகொலையை காங்கிரசுடன் சேர்ந்து நடத்திவிட்டு, இன்று உரிமை கேட்டு போராடுகிறார்கள்.


இந்த சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரியுமா அவர்களுக்கு? பாகிஸ்தானாக இருக்கட்டும், பங்காளதேஷாக இருக்கட்டும், ஆப்கானிஸ்தானாக இருக்கட்டும், இந்த மூன்று நாடுகளிலுமே பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அங்கு வாழுகின்ற சிறுபான்மை இன மக்கள், அதாவது இந்துக்கள், பார்சிகள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் இதுபோன்ற சிறுபான்மை இன மக்கள், மத ரீதியாக துன்பத்திற்கு ஆளாகி அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது.





ஆனால் இலங்கையில் நடந்தது என்ன பிரச்சனை? அங்கு தமிழ் இன மக்களை வாழ விடாமல் அடித்தார்கள். அப்போது மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தார்கள். அதில் இரண்டு லட்சம் பேர் இந்த பிரச்சினைகள் முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பி சென்று விட்டார்கள். மீதி ஒரு லட்சம் மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். நாம் அந்த ஒரு லட்சம் மக்களுக்கு குடியுரிமையை கொடுத்து விட்டோம் என்றால் மீண்டும் அவர்கள் எப்படி இலங்கைக்கு போவார்கள்? அவர்களை இலங்கை அரசு எப்படி ஏற்றுக்கொள்ளும்?


அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்கின்ற அவர்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா?


ஒரு நல்ல அரசாங்கம் அந்த அகதிகள் மீண்டும் இலங்கை சென்று சம அந்தஸ்துடன் நன்றாக வாழவேண்டும் என்பதற்கான வழிவகுத்து தரவேண்டும்.


இப்போது நாம் மீனவர்கள் படுகொலையை பார்க்க முடியுமா? ஒரு காலத்தில் எவ்வளவு பேர் இறந்தார்கள். அது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தது. இன்று ஒரு மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது உண்டா? இப்படி ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்தது உண்டா? ஆனால் அதுபற்றி எல்லாம் திமுக பேசவே பேசாதே.


அடுத்தது திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்த கூட்டணி எல்லாம் சேர்ந்து இந்தியாவில் உள்ள சிறுபான்மை இன மக்களின் உணர்வை தூண்டி பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள்.


இந்த சட்டம் என்ன சொல்கிறது? இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை நாடு கடத்த வேண்டும் என்று சொல்கிறதா? இல்லை. இங்கே இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களும் இந்திய முஸ்லிம்கள்தான். அவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை உள்ளது. வெளியில் இருந்து வருகின்ற முஸ்லிம்களைத்தான் அனுமதிக்கமாட்டோம் என்று சொல்கிறார்கள்.
ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால், ஏற்கனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த நாடுகள் முஸ்லிம் நாடுகள்.


நீங்கள் கேட்கலாம் அங்குள்ள சில முஸ்லிம்மக்கள் ஜாதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று. ஆனால் அவர்களுக்கெல்லாம் இங்கு அடைக்கலம் கொடுக்க முடியாது. ஏனென்றால் அது அவர்களின் உள்நாட்டுப் பிரச்சனை.


இப்போது இங்கே ஜாதி ரீதியாக ஏதாவது பிரச்சனை இருந்தால், வேறு நாடுகளுக்கு சென்று அங்கு குடியுரிமை தாருங்கள் என்று கேட்க முடியுமா? கேட்க முடியாது. ஏனென்றால் இந்திய நாட்டு அரசாங்கம் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். அது போன்றுதான் அங்கேயும்.


நாம் எதற்காக பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்தோம்? முஸ்லிம்கள் அவர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டுதான் பாகிஸ்தானை நாம் பிரித்துகொடுத்தோம். இந்தியா அனைத்து மக்களையும் வாழும் நாடாக உள்ளது. நாம் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்த போது, பாகிஸ்தானில் வாழ்ந்த இந்துக்களின் சதவீதம் 25. அதேநேரத்தில் இந்தியாவில் முஸ்லிம்களின் சதவீதம் 9 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலைமை பாகிஸ்தானில் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே இந்துக்கள் உள்ளனர். அதேமாதிரிதான் வங்கதேசம் ஆகட்டும், ஆப்கானிஸ்தான் ஆகட்டும்.


ஆனால் இந்தியாவில் அப்போது 9 சதவீதமாக இருந்த முஸ்லீம்கள் இப்போது 15 சதவீதமாக அதிகமாகி உள்ளனர்.


இதற்குக் காரணம் இங்குள்ள மக்கள் உணர்வுகள் அப்படி. அனைவரும் ஒற்றுமையாகதான் வாழ்ந்து வருகிறோம். இதை ஜாதியாக, மத ரீதியாக, அரசியல் ரீதியாக பிரச்சனையை உருவாக்கி சில கட்சிகள் லாபம் அடைக்கிறது. இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால், இங்கே இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து விட்டால் இவர்களின் அரசியல் ஓடாது. அதுதான் இவர்களின் பிரச்சனை.


இந்திய நாட்டைப் பொறுத்த வரைக்கும், இந்துவாக இருக்கலாம், கிறிஸ்தவராக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், எந்த மதமாக இருந்தாலும் இந்தியன் எந்த தேசப்பற்று இருந்தால், அவன் இந்தியன்தான்.


அகண்ட பாரதத்தில் இந்துக்களும் வாழ்ந்தார்கள். கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள். முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள். புத்தர்கள், சீனர்கள், சீக்கியர்கள் அனைவருமே வாழ்ந்தார்கள். இங்கு அனைத்து மதங்களுமே போற்றப்பட வேண்டியவைதான்.


ஆனால் இந்து மதம் மட்டும் அழிந்து கொண்டே வருகிறது. இதை யார் காப்பாற்றுவார்?


இதற்கிடையே ராகுல் காந்தி, “ரேப் இன் இந்தியா” என்று ஒரு கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டு உள்ளார். ராகுல்காந்திக்கு இந்தியாவைப் பற்றி என்ன தெரியும்? எங்க தலைமுறை, எங்க அப்பா, அவங்க அப்பா, இப்படி பரம்பரை பரம்பரையாக நாங்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். இந்தியாவில்தான் சாகப்போகிறோம்.
ஆனால் ராகுல் காந்தி அப்படியா?


அவருக்கு இந்திய நாட்டைப் பற்றி என்ன தெரியும்? இந்திய நாட்டில் வாழ்ந்த வீரப்பெண்கள் மணிகளைப் பற்றி என்ன தெரியும்? அவர் எல்லாம் இந்திய தேசத்தை பற்றி இன்று பேசுகிறார். அறுபது ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆண்டு குட்டிச் சுவராகிவிட்டு, இப்போது இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.


இந்தியாவில் பல மொழிகள் இருக்கலாம். கலை, கலாச்சாரம் இருக்கலாம். பல நிறங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் அனைவருக்கும் ஒரே எண்ணம்தான், அது இந்திய எண்ணம்தான்.


காங்கிரஸ்-திமுக இந்த கூட்டணிக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.


எங்கள் தாத்தா காலமும் உங்களை நம்பி ஏமாந்தது. எங்கள் அப்பா காலமும் உங்களை நம்பி ஏமாந்தது. ஆனால் எங்கள் தலைமுறை உங்களை நம்பி என்றும் ஏமாறாவே ஏமாறாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


இவ்வாறு அந்த வீடியோவில் ஹரிஹரன் கூறியுள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News