Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து மக்களவையில் பகவத் கீதை நூலின் மீது கை வைத்து பதவி ஏற்றுக் கொண்ட எம்.பி! மற்ற எம்பிக்கள் கரகோஷம்!

இங்கிலாந்து மக்களவையில் பகவத் கீதை நூலின் மீது கை வைத்து பதவி ஏற்றுக் கொண்ட எம்.பி! மற்ற எம்பிக்கள் கரகோஷம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 9:48 AM GMT


இங்கிலாந்து பாராளுமன்ற பொதுத்தேர்தல் சென்ற 12.12.2019 அன்று நடந்தது. இதில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஜெரிமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சியை தோற்கடித்தது.


போரிஸ் ஜான்சன் தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்று, தனது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.


இவர் நமது பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். தேர்தல் பிரச்சாரத்தின்போது கடந்த 9-ஆம் தேதி லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.


இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அனைத்து எம்பிக்களும் நேற்று பதவி ஏற்றனர். அப்போது பெரும்பான்மையான எம்பிக்கள் பைபிள் நூலின் மீது கை வைத்து பைபிள் வாசகங்களைக் கூறி பதவிப் பிரமாணம் செய்தனர்.


இவர்களில் கட்சியின் மூத்த எம்பியான பாப் பிளாக்ஸ்மேன் பதவி ஏற்கும்போது இந்துக்களின் புனித நூலாகிய பகவத்கீதை நூல் மீதும் கைவைத்து கீதை வாசகங்களைக் கூறி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.


இங்கிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக பகவத் கீதை தத்துவங்களைக் கூறி பதவி பிரமாணம் செய்து கொண்டவர் இவர்தான் எனக் கூறப்படுகிறது.


இவர் சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைக்கு ஆதரவானக் கருத்துக்களை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தின் மீது அலாதியப்பிரியம் உள்ளவர். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதும், இந்து கோவில்களுக்கு செல்வதும் இவருடைய வழக்கங்கள் என்று கூறப்படுகிறது.




https://twitter.com/BobBlackman

Next Story