Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தை கலவர பூமியாக்க சதியா? காஜா மொய்தீன், அப்துல் சலீம், சையத் அலி நவாஸ், அப்துல் சமர் ஆகிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவல்!

தமிழகத்தை கலவர பூமியாக்க சதியா? காஜா மொய்தீன், அப்துல் சலீம், சையத் அலி நவாஸ், அப்துல் சமர் ஆகிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 8:13 AM GMT


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை முஸ்லிம்களால் கொடுமைகளை அனுபவித்து, அங்கிருந்து துரத்தப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிக்கள், ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த சட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்தத் தலைவர்களின் கருத்துக்கள் யாவும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குரலை பிரதிபலிப்பதாகவே உள்ளன.


காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், சில முஸ்லிம் கட்சிகளும், சில முஸ்லிம் அமைப்புகளும் கலவரத்தை தூண்டி வருகின்றனர்.


இந்த நிலையில் காஜா மொய்தீன், அப்துல் சலீம், சையத் அலி நவாஸ், அப்துல் சமத் ஆகிய 4 முஸ்லிம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர்.


அவர்கள் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றும் சதித் திட்டத்துடன் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்து இயக்கங்களின் முக்கியத் தலைவர்களை தீர்த்துக் கட்டும் திட்டத்துடனும் வந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்த பயங்கரவாதிகள் 4 பேரும் சேலத்தில் இருந்து கோவைக்கு ஊடுருவி உள்ளதாகவும், உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகள் பயணம் செய்துள்ள காரின் தகவல்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளது.


பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதை தொடர்ந்து இந்து முன்னணி தலைவர் காளீஸ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் கோவை ரயில் நிலையம், விமான நிலையம், இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story