Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் தொடங்க வேண்டிய முக்கிய புதிய திட்டங்கள்! டெல்லி பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் தொடங்க வேண்டிய முக்கிய புதிய திட்டங்கள்! டெல்லி பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 1:07 PM GMT


டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 2020-21-ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்:


தமிழகத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக அளிக்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.


சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வேண்டும் என்றார். குறிப்பாக கோதாவரி-காவிரி இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


மாநாடு முடிந்ததும் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.


Next Story