Top
undefined
Begin typing your search above and press return to search.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா?

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2019 12:45 PM GMT


அரசியல் என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் தெரியாத நபர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று சொல்வது நியாயமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில்அரசியலுக்கு புது புது அர்த்தம் கற்பித்த குடும்பம் திமுக குடும்பம் என்பதை தமிழ் சமுதாயம் உணர்ந்துள்ளது.


“எல்லோரு வாருங்கள், குடியுரிமை சட்டத்தை எதிர்க்க வேண்டும்” என்று எல்லா அரசியல் கட்சிகளையும், மாணவர்களையும், பேராசிரியர்களையும் தூண்டிவிட்டு அமைதியை கெடுப்பவர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். எதிர்கட்சி தலைவராக இருப்பதற்காக, ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட அவருக்கு பொது அமைதியை கெடுக்க சட்டம் வழிவகை செய்கிறதா? என்பதை மு.க ஸ்டாலினுக்கு எடுத்து சொல்ல விவரம் தெரிந்த ஒருவர்கூட அவருடன் இல்லையோ?


எந்த ஒரு சட்டமும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கபட்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்று கொள்ளபட்டு சட்டம் முழுமை பெற்ற பின்பு, அந்த சட்டத்தை எதிர்ப்பது சட்டவிரோதம் மற்றும் தேசவிரோத நடவடிக்கை என சட்டம் சொல்கிறது. அப்படி தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மக்கள் பிரிதிநிதித்துவ சட்டபடி பதவியை நீக்க வேண்டும். மேலும் குற்ற நடைமுறை சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.


மக்கள் பிரிதிநிதியாக இருக்கும் ஒருவரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லது பொது அமைதி கெடும் என்றால், கைது செய்து சிறையில் அடைக்கலாம் என சட்டம் சொல்கிறது.


அரசியல் சாசனத்தின்படி, பதவி ஏற்றுகொண்ட ஒரு நபர் அல்லது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்து கொண்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை எதிர்ப்பது தேச துரோகமாக கருதி பதவியையும் பறிக்கவும் வழிவகை செய்கிறது. இதுகூட தெரியாத குடியுரிமை சட்ட எதிர்ப்பு சர்வாதிகாரி மு.க ஸ்டாலினை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்கிறது என்கிறது சட்டம்.


அப்படி இருந்தும் அவர் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.


Next Story