Top
undefined
Begin typing your search above and press return to search.

நாளை முதல் ஜனவரி 1-ந்தேதிவரை கல்லூரி, பல்கலை கழகங்களுக்கு 12 நாட்கள் தொடர் விடுமுறை! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

நாளை முதல் ஜனவரி 1-ந்தேதிவரை கல்லூரி, பல்கலை கழகங்களுக்கு 12 நாட்கள் தொடர் விடுமுறை! உண்மையான காரணம் என்ன தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2019 1:19 PM GMT


பொதுவாக ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் நாள் மட்டுமே கல்லூரி, பல்கலைகழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.


இந்த நிலையில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த இரு நாட்களும் விடுமுறை விடப்படும் என்றாலும் தமிழக அரசின் அறிவுரையின் பேரில் நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் எப்போதுமில்லாத வகையில் கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களுக்கு 12 நாள் விடுமுறை கிடைத்துள்ளது. இதற்கு காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக கூறப்பட்டாலும் மற்றொரு காரணமும் உண்டு என கூறப்படுகிறது.


தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து இங்குள்ள மாணவர்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு போராட்டம் நடத்த விரும்பவில்லை, ஆனால் சில கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தூண்டுதலால் முஸ்லிம் அமைப்பு நடத்தும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் மட்டுமே ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். மற்ற கலை கல்லூரி மாணவர்களோ அல்லது கல்வி நிலையங்களோ இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முன் வரவில்லை.


இந்த நிலையில் இங்குள்ள திமுக உட்பட சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் இந்த விவகாரத்தில் பீதி கிளப்பி தமிழக அளவில் மாணவர்களை தூண்டிவிட்டு மாநிலத்தை கலவர பூமியாக்கி உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் செய்ய முயல்வதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.


இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் சுமூகமான முறையில் தேர்தல்களை நடத்தவும், எதிர்கட்சிகளின் எண்ணங்கள் ஈடேறக் கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு முன்கூட்டியே அதாவது நாளை முதல் ஜனவரி – 1 ந்தேதி வரை விடுமுறை விட அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


.


Next Story