Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கே குண்டு வைக்கவா பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் குடியுரிமை கேட்கிறார்கள்? - தி.மு.க - காங்கிரசை வறுத்தெடுத்த வேலூர் இப்ராகிம்!

இங்கே குண்டு வைக்கவா பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் குடியுரிமை கேட்கிறார்கள்? - தி.மு.க - காங்கிரசை வறுத்தெடுத்த வேலூர் இப்ராகிம்!

இங்கே குண்டு வைக்கவா பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் குடியுரிமை கேட்கிறார்கள்? - தி.மு.க - காங்கிரசை வறுத்தெடுத்த வேலூர் இப்ராகிம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2019 5:13 AM GMT



தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் எம்.இப்ராகிம், வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது:-


இந்த தேசத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து தேச வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை இந்தியராக நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். நாம் அதற்காக முயற்சி செய்வோம். இந்த உறுதிமொழியை ஏற்றவனாக எனது இந்த பதிவை நான் வெளியிடுகிறேன்.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல்செய்ததிலிருந்தே அதனை கடுமையாக எதிர்க்கிறார்கள். குறிப்பாக திமுக எதிர்க்கிறது. அவர்கள் எதற்காக இவ்வளவு கடுமையாக எதிர்க்க வேண்டும்? திமுக மட்டும் எதிர்க்கவில்லை. திமுகவும் காங்கிரசும் சேர்ந்துதான் எதிர்க்கின்றன. இவர்கள் இதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னால் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். காஷ்மீருக்கான 370 மற்றும் 35ஏ நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தேசிய நலனுக்காக தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என்று சந்தேகம் படும் நபர்களை விசாரிக்க கூடிய என் ஐ ஏ சட்ட திருத்தத்தையும் எதிர்த்தார்கள்.


இது போன்று இவர்கள் எதிர்க்கின்ற நல்ல விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 2014-இல் இலிருந்து மத்திய அரசு எதையெல்லாம் ஒரு சட்டமாக கொண்டு வருகிறதோ, குறிப்பாக அயோத்தியா வரைக்கும் எல்லா விஷயத்திலும் இவர்கள் ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதே நிலையில் மறைமுகமாக இவர்கள் ஆதரிக்கவும் செய்வார்கள். இவர்களைப் பற்றி சொல்வதாக இருந்தால், இரட்டை நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள். ஒரே உறுதியான நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய தன்மை காங்கிரசுக்கும் கிடையாது, திமுகவிற்கும் கிடையாது.





இன்றைய பரபரப்பான சூழலில் தேசிய திருத்தப்பட்ட சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது, சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். நாம் என்ன கேட்கிறோம் என்றால், இதில் சிறுபான்மையினருக்கு எதிராக இவர்கள் என்ன கொண்டு வந்து விட்டார்கள்?


இந்தியாவினுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகத்தெளிவாக பாராளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் சொல்லி இருக்கிறார், “இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாயிண்ட் 0001 % கூட எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்” என்று உறுதி அளித்துள்ளார்.
இதைவிட ஒரு அரசு என்ன செய்துவிட முடியும்? அதையும் தாண்டி என்ன சொல்கிறார்கள் என்றால், மாநிலங்களவையில் சொல்லுகின்ற பொழுது, “முஸ்லிம்கள் எக்காரணத்தை கொண்டும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பயப்பட வேண்டியது என்பது அறவே இல்லாமல் உள்ளது. மத்திய அரசு உங்களுக்கான அரசு. முஸ்லிம்கள் பயப்படவும் தேவையில்லை, காங்கிரஸ் முஸ்லிம்களை பயப்பட வைக்கவும் தேவையில்லை” என்று சொன்னார்.


இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்திய முஸ்லிம்களுக்கு மிகப் பாதுகாப்பான அரசு என்பது மத்திய அரசு. பாரத பிரதமர் மோடி தலைமையில் மிகத்தெளிவாக இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது. இதனுடைய வளர்ச்சியை பிடிக்காமல், எங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ? இந்துக்கள் ஓட்டை ஒரு பக்கமாக வாங்கவேண்டும், இஸ்லாமியர்களுக்கு எதிராக எதையாவது செய்து அவர்களுடைய ஓட்டையும் வாங்க வேண்டும் என்று தமிழகத்தில் திமுகவும், இந்திய அளவில் காங்கிரஸ் செய்யக்கூடிய சதிச்செயல் தான் இது.


முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை என்று வேறு யார் உத்தரவாதம் தரவேண்டும்? பிரதமர் உத்தரவாதம் தரவேண்டும். இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவரக்கூடிய உள்துறை அமைச்சர் உத்திரவாதம் தர வேண்டும். இரண்டு பேருமே உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பயப்படத் தேவையில்லை, உங்களுக்கான உரிமை எப்பொழுதும் போல் இருக்கும். இது ஒரு ஜனநாயக நாடு. இவ்வளவு வெளிப்படையாக பேசி இருக்கும் பொழுது, இவர்கள் பயன்படுத்தக்கூடிய வேலையை செய்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எங்கே ஆபத்து வந்தது? இந்தியாவில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் ஆபத்தில்லை.


முதலில் இந்த சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பற்றியது இல்லை. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்களை அகதிகள் என்று நாம் சொல்கிறோம். சட்டப்படி அவர்கள் வந்தார்களா என்று கேட்டாரல், இல்லை, சட்டத்திற்கு புறம்பாக வந்தவர்கள் என்று சொல்வார்கள். அதாவது சட்டவிரோத குடியேறிகள் என்று சொல்லலாம். சட்டவிரோத குடியேறிகள், பாகிஸ்தானிலிருந்து, வங்கதேசத்திலிருந்து அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளார்கள். இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.


குடியுரிமை தரலாம் தவறேதுமில்லை. பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமை சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை சொல்லப்படவில்லை? ஏனென்றால் மனம் திறந்து வெளிப்படையாக சொல்வதாக இருந்தால், இந்த நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அகதிகளாக வந்தவர்களை அரவணைத்து கொள்ளலாம். தவறேதுமில்லை.
ஆனால் பாகிஸ்தானுக்கு இயற்கையாகவே ஒரு குணம் இருக்கிறது. வந்தவர்களில் பதில் ஒருவர் தீவிரவாதியாக உள்ளே நுழைந்தால், என்ன செய்ய முடியும்? ஆயிரம் பேரில் 10 பேர் தீவிரவாதியாக உள்ளே நுழைந்தால், என்ன செய்வது? தேசத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டாமா?


இந்த சட்டம் மத பாகுபாடு பேசுகிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை. இந்த சட்டம் என்ன சொல்கிறது என்றால், மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு அல்லது பாதிப்புகளுக்கு ஆளான சிறுபான்மையினர். முஸ்லிம்கள் இப்போது எங்கே வருகிறார்கள் என்றால், நான் ஒரு இஸ்லாமியனாக இருந்து என்ன கேட்கிறேன் என்றால், அங்கிருந்து வருகின்ற முஸ்லிம்கள் மத துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு வந்தார்களா? பாகிஸ்தானிலிருந்து, வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் மத துன்புறுத்தலுக்கு ஆளாகி இஸ்லாமிய அடிப்படையில் எங்களால் அங்கு தொழமுடியவில்லை, இஸ்லாமிய அடிப்படையில் நாங்கள் நோன்பு நோக்க முடியவில்லை, அங்கு கடுமையான அச்சுறுத்தல்கள் உள்ளது, இதுபோன்ற காரணத்திற்காக ஏதாவது ஒரு முஸ்லிம் இங்கே வந்து இருக்கிறார்களா? இல்லவே இல்லை.


பாகிஸ்தான் ஒரு வளர்ச்சி இல்லாத நாடாக இருக்கிறது. வங்கதேசமும் ஒரு வளர்ச்சி இல்லாத நாடாக இருக்கிறது. அவர்கள் வெறுமனே தீவிரவாதத்தை ஊக்குவிப்பது அல்லது இந்தியாவின் முன்னேற்றத்தை தடுப்பது என்ற ஒரு பெரிய அஜெண்டாவை முன்வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார்கள்.


இந்த சூழ்நிலையில் பலதரப்பட்ட இஸ்லாமியர்களும் பிழைப்பதற்காக, வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைகிறார்கள். இப்படி குடியேற கூடியவர்கள், முக்கியமாக எதற்காக இவர்களை கண்காணிக்க வேண்டியது இருக்கிறது என்றால், ஏன் இதில் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டியது இருக்கிறது என்றால், இயல்பாகவே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை ஆங்காங்கே வைத்துள்ளது. மனோரீதியாக அவர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.
ஆகவே இவர்களுக்கு குடியுரிமை கொடுத்தால், அவர்கள் இங்கே வந்து ஆங்காங்கே குண்டு வைத்தார்கள் என்றால் என்ன செய்வது? இன்னும் ஒரு படி மேலே சொல்வதாக இருந்தால் இப்படி பாகிஸ்தானிலிருந்து வரக்கூடியவர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்களுக்கு உடனே குடியுரிமை என்று வழங்கினால், இங்கே இப்போது இருக்கின்ற இஸ்லாமியர்களின் நிலைமை என்ன? இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய சமூகம் 25 கோடி இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு என்ன தீர்வு? ஏதாவது ஒரு தவறு நடந்துவிட்டால், ஒட்டு மொத்தமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை சந்தேகப் பார்வையில் இங்கு உள்ள இந்து சகோதரர்கள் பார்க்க மாட்டார்களா? இங்குள்ள நல்லிணக்கம் கெட்டுப்போகாதா?


ஆகவே நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்றால், முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும். பாகிஸ்தானியராக இருந்தாலும் சரி, ஆப்கானிஸ்தானியராக இருந்தாலும் சரி, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இஸ்லாமியர்கள் சகோதரர்கள். திருக்குறான் அப்படிதான் சொல்கிறது. இஸ்லாமின் மீது நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் சகோதரர்கள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.


ஆனால் தேசம் என்று வருமேயானால், தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். இது போக அந்த சட்டத் திருத்தமே சொல்கிறது முஸ்லிம்களையும் பரிசீலனை செய்வோம் என்கிறது. இந்த சட்டம் என்ன சொல்கிறது, முஸ்லிம்களையும் பரிசீலனை செய்வோம். ஆனால் இப்பொழுது இந்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறதே தவிர பாதிக்கப்பட்ட அல்லது அகதிகளாக வந்த இஸ்லாமியர்களை உடனே கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவோம் அப்படி என்று ஏதாவது பேசப்பட்டிருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை.



ஊடகங்களும், திமுக-காங்கிரஸ் போன்றவர்களும் இதை முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய செயலாக பரப்பி, இதில் ஏதாவது ஒரு முஸ்லிம் இளைஞன் சுடப்பட்டு அல்லது சட்டத்திற்கு புறம்பாக செய்து அதனை ஒரு பெரிய பிரச்சினையாக கொண்டுவந்து, இவர்கள் அரசியல் குளிர் காய்வதற்கு முஸ்லிம்களை பயன்படுத்துகிறார்கள். அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு தேசம் முக்கியம். தேசத்தின் நலன் முக்கியம். இந்த தேசத்திற்காக கடந்த காலத்திலும் முஸ்லிம் இஸ்லாமியர்கள் அர்ப்பணித்து இருக்கிறார்கள். இன்றும் நாங்கள் அர்ப்பணிக்கிறோம். இனிமேலும் தேசத்திற்காக நாங்கள் வாழ்வோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.


இவ்வாறு அந்த வீடியோ பதிவில் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News