Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் உண்மை தேடுதலுக்கான நெருப்பை பற்ற வைத்த சத்குரு - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

சென்னையில் உண்மை தேடுதலுக்கான நெருப்பை பற்ற வைத்த சத்குரு - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

சென்னையில் உண்மை தேடுதலுக்கான நெருப்பை பற்ற வைத்த சத்குரு - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2019 2:52 AM GMT


சென்னையில் சத்குரு நடத்திய ஈஷா யோகா வகுப்பில் பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறையினர், மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


ஈஷா யோகா மையம் சார்பில் உலகம் முழுவதும் ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் ஈஷா யோகா வகுப்பு தமிழில் டிசம்பர் 18, 19 தேதிகளிலும், ஆங்கிலத்தில் 21, 22 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சத்குரு அவர்கள் இவ்வகுப்பை நேரடியாக நடத்துகிறார்.


இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ் வகுப்புக்கு வருகை தந்தனர். குறிப்பாக, பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறையினர், மற்றும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர். இதுதவிர, சாதி, மத வேறுபாடுகள் கடந்து அன்றாட கூலி தொழிலாளியில் தொடங்கி ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வரை பல்வேறு தரப்பினர் இவ்வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.


அவர்களுக்கு சத்குரு அவர்கள் ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற சக்திவாய்ந்த தியானப் பயிற்சிக்கு (டிசம்பர் 19) தீட்சை வழங்குகிறார். சத்குரு தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் கூடிய பேச்சால் பங்கேற்பாளர்களின் மனத் தடைகளை உடைத்து சிரிப்பொலிகளால் அரங்கத்தை அதிர செய்தார். மேலும், வேத, உபநிஷங்களில் இருந்தோ முந்தைய தலையினர் கூறியதையோ உதாரணமாக கூறாமல் தான் உணர்ந்ததை மட்டும் எடுத்துரைத்து பங்கேற்பாளர்களுக்குள் உண்மை தேடுதலுக்கான நெருப்பை பற்ற வைத்தார்.


அத்துடன், சவுண்ட்ஸ் ஈஷா குழுவினரின் இசை பங்கேற்பாளர்களை மெய் மறக்க செய்தது. ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகளின் களறி பயட்டு போன்ற சாகசங்களை வியப்பூட்டியது.


டிசம்பர்
21, 22 ஆகிய தேதிகளில் நடக்கும் ஆங்கில வகுப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். அவ்வகுப்பில் அண்டை மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடும், ஆனந்தமாகவும் செய்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News