Top
undefined
Begin typing your search above and press return to search.

அனுமதியின்றி போராட்டம்: நடிகர் சித்தார்த் மற்றும் தொல் திருமாவளவன் போன்றவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

அனுமதியின்றி போராட்டம்: நடிகர் சித்தார்த் மற்றும் தொல் திருமாவளவன் போன்றவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2019 1:08 PM GMT


கடந்த கூட்டத் தொடரில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவருக்கு  குடியுரிமை வழங்கும் மசோதா நிறைவேறியது இதை கண்டித்து வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் பெங்களூரு, மங்களூர் போன்ற பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை கொண்டு தாக்கியதால்  போலீசார் சுட்டதில் நேற்று 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 



இந்நிலையில்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று அனுமயின்றி போராட்டம் நடைபெற்றது,இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த்,ஜவாஹிருல்லா மற்றும் அமெரிக்க நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மொத்தம் 40 அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்,இவர்கள் மீது சட்ட விரோதமாக கூடியது உள்ளிட்ட2 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story